Thanjavur

News March 24, 2025

நினைத்தது நிறைவேறும் யோகநரசிம்மர் ஆலயம்

image

தஞ்சாவூர், திருவிடைமருதூர் தாலுகா நரசிங்கன்பேட்டையில் அருள்பாலிக்கும் யோக நரசிம்மர் கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். இக்கோயிலில் வேண்டுதல் நிறைவேற கொப்பரை தேங்காயை கட்டிவிட்டு வந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. நிறைவேறியதும் பக்தர்கள் அந்தத் தேங்காயை கடவுளுக்கு உடைத்து அர்ச்சனை செய்து வழிபடுவர். ஒருமுறை சென்று வாருங்கள் மாற்றம் நிகழும்…பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க.. 

News March 24, 2025

தஞ்சையில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்

image

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் நகராட்சி, பேராவூரணி, பெருமகளூர் பேரூராட்சிகள் மற்றும் பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியங்களில், மார்ச்.26, 27 ஆகிய இரண்டு நாட்களுக்கு குடிநீர் நிறுத்தப்படும் என தஞ்சாவூர் நிர்வாகப் பொறியாளர் ப.நாகராஜ் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதி மக்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 23, 2025

அதிராம்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

image

அதிராம்பட்டினம் நரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது39). கொத்தனார். நேற்று இவர் கீழத்தெருவில் புதிதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த மின் மோட்டாருடன் இணைக்கப்பட்டிருந்த ஒயரில் அவருடைய கை எதிர்பாராவிதமாக பட் டது. இதில் மின்சாரம் பாய்ந்து, செந்தில்குமார் தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்தில் இறந்தார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 22, 2025

முதியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 

image

13 வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை செய்த சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்ற முதியவர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்நிலையில் அவர் மீது குண்டர்‌ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதனையடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

News March 22, 2025

கூலி தொழிலாளி அடித்து கொலை – போலீசார் விசாரணை

image

திருவலஞ்சுழி பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ்(36). இவர் மதுவிற்கு அடிமையானதால் இவரை விட்டு மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து வாழ்கின்றனர். குடி போதைக்கு அடிமையான காளிதாசை அவரது சகோதரர் பாண்டியன் நேற்று இரவு கண்டித்துள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட அருகில் இருந்த கட்டையை எடுத்து காளிதாசை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

News March 22, 2025

புதிய பேருந்து நிலையத்தினை திறந்து வைக்கும் அமைச்சர்

image

ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சியில் டாக்டர் கலைஞர் புதிய பேருந்து நிலையத்தினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர்.கோவி.செழியன் ஆகியோர் ஞாயிற்றுக் கிழமை (23.03.2025) காலை 11.00 மணியளவில் திறந்து வைக்கவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

News March 22, 2025

தஞ்சை டைடல் பார்க்கில் வேலை வாய்ப்பு

image

தஞ்சாவூர் டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 22, 2025

தஞ்சை வழியாக திருச்சி-சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ஆலோசனை

image

தஞ்சாவூர் வழியாக திருச்சி-சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க ஆலோசிக்கப்படுகிறது என்றார் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த பின்னர் அவர் தஞ்சாவூர் வழியாக திருச்சி-சென்னைக்கு பகல் நேரத்தில் கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது என்று கூறினார்.

News March 21, 2025

கும்பகோணம்: 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில்!

image

வரலாற்றுச் சிறப்புமிக்க கும்பகோணத்தில் அமைந்துள்ள சக்ரபாணி கோயில் மிகவும் விஷேசமான கோயில்களுள் ஒன்றாகும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் மூலவர் ஸ்ரீ சக்கரபாணி பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், மூன்று கண்களுடனும், எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களில் ஏந்தி காட்சி தருகிறார். சக்கரபாணி சுவாமிக்கென்று தனிக்கோவில் இருப்பது, இத்தலத்தில் மட்டும்தான் என்பது தனிச்சிறப்பாகும்

News March 21, 2025

தஞ்சாவூர் கும்பகோணம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

image

தஞ்சை, கும்பகோணம் வழியாக வாராந்திர ரயில் இயக்கப்பட உள்ளது. சார்ல பள்ளியில் இருந்து புதன்கிழமைதோறும் இரவு 11.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் கும்பகோணத்திற்கு வியாழன் மாலை 5 மணிக்கும், தஞ்சைக்கு 5.42 மணிக்கும் வந்து சேரும். மறு மார்க்கத்தில் வெள்ளி கிழமையில் கன்னியாகுமரியில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு தஞ்சை, 2 மணிக்கு கும்பகோணத்திற்கு வரும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

error: Content is protected !!