India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களை பொது ஏலத்தில் விட, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிடப்பட்டுள்ளது. பொது ஏலமானது, வருகின்ற 20ஆம் தேதி காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் கோர்ட் சாலை, பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது. SHARE NOW!
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கல்வி கடன், குடும்ப அட்டை, பட்டா, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 450 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு.
தஞ்சை மாரியம்மன் கோவிலை சேர்ந்தவர்கள் சரத்குமார்(34) – மோகனசுந்தரி (27) தம்பதி. இவர்களுக்கு 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. சரத்குமார் நேற்று குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மோகனசுந்தரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனமுடைந்த சரத்குமாரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று 11.11.2024 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் அலுவலர்கள் பலர் உடன் உள்ளனர். பொதுமக்கள் ஏராளமானோர் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
மாமன்னன் இராசராச சோழனின் 1039 ஆம் ஆண்டு சதயவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் சதய விழாக் குழுவின் சார்பில் மாமன்னன் இராசராசன் விருதினை பேராசிரியர் கோ.தெய்வநாயகம் திரை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மருத்துவர் சி.குணசேகரன், கல்வியாளர் புனிதா கணேசன், சமூகக்கொடையாளர் குரு.சுப்ரமணிய சர்மா ஆகியோர்களுக்கு இன்று வழங்கினார். கவிப்பேரரசு வைரமுத்து பலர் உடன் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் மகளிர் தங்கும் விடுதிகளை நடத்தும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்கள் விடுதிகளை தமிழ்நாடு விடுதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இல்லங்கள் (ஒழுங்கு முறை) சட்டம் 2014-ன் கீழ் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை கீழே நீத்துக்கார தெருவை சேர்ந்த ஹரிஹரன், ரெட்டியபாளயத்தை சேர்ந்த கந்தவேல், கரந்தை கல்லுக்காரத் தெருவை கோவிந்தராஜ் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பரிந்துரை பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் தடுப்பு காவலில் வைத்திட தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டனர்.
பிரபல நடிகர் டில்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். 1964 -1974 ஆண்டு வரை இந்திய விமானப்படையில் பணியாற்றியுள்ளார். இயக்குநர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் பட்டின பிரவேசம் என்ற படத்தில் அறிமுகமாகி 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். என கூறி குடந்தை எம்எல்ஏ அன்பழகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழில் தங்களது பெயரைச் சேர்க்க டிச.31ஆம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய இயலாது. ஏற்கனவே பிறப்புச் சான்றிதழ் பெற்று அலுவலகத்தை அணுகி தங்களது பெயரை விண்ணப்பித்து பெயர் பதிவேற்றம் செய்து கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து 19 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச பயிற்சிகள் நடைபெற உள்ளது என இம்மையத்தின் தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.