India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், கபிஸ்தலம், அம்மாபேட்டை அய்யம்பேட்டை, கும்பகோணம் மற்றும் பிற பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும், மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நியாயவிலைக்கடையில் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் உரிமத்தினை விட்டுக்கொடுப்பது தொடர்பாக, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் வலைதளத்தின் (WWW.tnpds.gov.in) மூலமாக குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம்தெரிவித்துள்ளார்.
விபத்து மற்றும் வேறு காரணங்களால் கை கால் துண்டிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை அவயங்கள் வழங்குவதற்கான சிறப்பு அளவீடு முகாம் 13.11.24 புதன்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. செயற்கை அவயங்கள் தேவைப்படுவோர் தகுந்த ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
ஞ்சை பெரிய கோயிலில் உள்ள நந்தி பெருமானுக்கு அபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆஃபிஷேகத்தில் கலந்து கொள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை காலை சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்து, பின்னர் கார் மூலம் தஞ்சை வந்தடையவுளார். மேலும் அவர் உலகப்புகழ் பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்திற்கு சென்று பார்வையிடுகிறார்.
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம் புதன் கிழமை மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை நவ.13 பூதலூர் வட்டம் வீரமரசன்பேட்டை கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்துவதற்கு தஞ்சை மாவட்ட ஆட்சி பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இரண்டு மற்றும் நான்கு சக்கர மோட்டார் வாகனங்களை பொது ஏலத்தில் விட ,மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளனர். பொது ஏலமானது வரும் 20ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் கோர்ட் சாலை பழைய ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறையின் சார்பில், கும்பகோணம் ஶ்ரீ சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறு தானிய உணவு கண்காட்சி நேற்று நடைபெற்றது. இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கும்பகோணம் துணை மேயர் சுப .தமிழழகன் கலந்து கொண்டு துவக்கி வைத்து பார்வையிட்டார்.
அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் 2311 வாக்குசாவடிகள் அமையப்பெற்றுள்ள மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய ஏதுவாக தேர்தல் சிறப்பு முகாம்கள் எதிர்வரும் 16ந்தேதி,17ந்தேதி,23ந்தேதி, மற்றும் 24ந்தேதி,ஆகிய நான்கு நாட்கள் காலை 09.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, பொதுமக்கள் இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்தி மாவட்டஆட்சியர் வேண்டுகோள்
கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்குட்பட்ட பெருமாண்டி பூண்டியாயி கோவில், கும்பகோணம் சாத்தார தெரு மற்றும் கும்பேஸ்வரன் கோவில் பின்புறம் நடந்த மூன்று கொள்ளை சம்பவத்தில் சரவணகுமார் மற்றும் தீனேஷ் மீது வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்று சரவணகுமார் மற்றும் தீனேஷ் ஆகியோருக்கு தலா ஒன்பது ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராத தொகையும் விதித்து கும்பகோணம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணி நடைபெற்றும் வரும் நிலையில் குஜராத் மாநிலத்திலிருந்து இருந்து சரக்கு ரயிலில் 42 வேகன்களில் யூரியா உரம் தஞ்சை வந்தது. இந்த உரங்கள் தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது.
Sorry, no posts matched your criteria.