India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக முப்பெரும் விருது வழங்கும் விழாவில் நடப்பாண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரில் புதிய விருது வழங்க உள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- இந்த ஆண்டுக்கான “மு.க.ஸ்டாலின் விருது” முதலைமுறையாக தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் வெளியிட்ட தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் தரவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை (2.5 ஆண்டுகளில்) தஞ்சை மாவட்டத்தில் 99 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அதிலும் 2024-இல் மட்டும் 16 பேர் ஆற்றில் மூழ்கி பலியாகியுள்ளனர். கடந்த செப்.8 தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் குளித்த 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்திற்கு வந்த சென்னையைச் சேர்ந்த 5பேர் ஆற்றில் மூழ்கி நேற்று மாயமாகினர். அவர்களின் 3 பேர் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இந்நிலையில், இன்று காலை 4ஆவது நபர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், தற்பொழுது 5வது நபரான ஆண்டோவும் சடலமாக மீட்கப்பட்டார். அவர்களின் உடல்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
இராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி டேராடுனில் ஜூலை 2025ஆம் பருவத்தில், எட்டாம் வகுப்பில் மாணவ மாணவிகள் சேர்வதற்கான தேர்வு 1/12/24 ல் நடைபெறுகிறது. அதன் விபரங்கள் அடங்கிய முழு தொகுப்பு www.rimc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கண்ட இணையதளத்தில் 30/9/24 தேதிக்குள் 11.5 வயதில் இருந்து 13 வயது உள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்திற்கு வந்த சென்னையை சேர்ந்த 5 பேர் நேற்று கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி மாயமானர். அதில் 3 பேர் நேற்று இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணியில் பிராங்கிளின் என்பவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை தஞ்சை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்த போலீசார் மீதமுள்ள ஒருவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரத்தநாடு யானைக்காரா பகுதியில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற புதூரை சேர்ந்த சரோஜா (75) வீடு திரும்பி கொண்டிருந்தாா். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு மா்மநபா்கள் சரோஜா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனா். இது தொடா்பாக அவா் அளித்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தஞ்சை 14 வட்டார தலைமையிட வேளாண்மை கிடங்குகளில் தற்போது பணமில்லா பரிவர்த்தனை மூலம் தங்களுக்கு தேவையான விவசாய இடுபொருட்களை ஜிபே, போன்பே, பேடிஎம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பெற்று கொள்ளும் வசதி, இந்தியன் வங்கி மூலம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சுஜாதா தெரிவித்துள்ளார்.
தஞ்சை 14 வட்டார தலைமையிட வேளாண்மை கிடங்குகளில் தற்போது பணமில்லா பரிவர்த்தனை மூலம் தங்களுக்கு தேவையான விவசாய
இடுபொருட்களை ஜிபே, போன்பே, பேடிஎம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு
மூலம் பெற்று கொள்ள வசதியும் மற்றும் இந்தியன் வங்கி மூலம் இந்த சேவை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது என வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சுஜாதா தெரிவித்துள்ளார்.
தஞ்சை உழவர் சந்தையில் இன்றைய (செப்.8) காய்கறி விலை நிலவரம்: கத்தரிக்காய் கிலோ ரூ.36/42/60, வெண்டைக்காய் ரூ.20, அவரைக்காய் ரூ.76, முருங்கைக்காய் ரூ.30, பல்லாரி ரூ.58, வெங்காயம் ரூ.40/44, தக்காளி ரூ.24, உருளை ரூ.40/46, பீட்ருட் ரூ.30/36, பீன்ஸ் ரூ.76, கேரட் ரூ.90, சவ்சவ் ரூ.26, பச்சைமிளகாய் ரூ.40, முள்ளங்கி ரூ.36, கோஸ் ரூ.28, இஞ்சி ரூ.160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு ஒரு நாள் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு முன்பதிவு நடந்து வருகிறது. 7 மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் இதில் அடங்கும். செப்.17,18,21,22,23,28,29 மற்றும் அக்.2,5,6,9,12,13,16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த ஒரு நாள் ஆன்மீக சுற்றுலாவுக்கு www.ttdconline.com எனும் இணைய முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.