Thanjavur

News November 14, 2024

தஞ்சை: இளைஞருக்கு 32 மாதங்கள் சிறை 

image

கும்பகோணம் சுற்றுவட்டார பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பகோணத்தை சேர்ந்த பாலாஜி என்ற இளைஞரை போலீசார் கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பாலாஜிக்கு 32 மாதங்கள் சிறை தண்டையும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி இளவரசி தீர்ப்பளித்தார்.

News November 14, 2024

15 வீடுகளில் டிவி, மிக்ஸி, கிரைண்டர் பழுது

image

தஞ்சை பள்ளிய அக்ரஹாரம் தெற்கு தெருவில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டிற்கு செல்லக்கூடிய மின் கம்பிகள் மீது மரக்கிளை முறிந்து விழுந்தது. இதனால் திடீரென மின்சாரம் தடை ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு சேதமடைந்தன.

News November 14, 2024

தஞ்சையில் 589 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உள்ளாட்சி தினத்தன்று நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் வருகிற 23ஆம் தேதி காலை 11 மணிக்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளின் நடைபெற உள்ளது. கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் இணைந்து ஆலோசிக்கப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 14, 2024

கும்பகோணம்  அஞ்சலகத்தில் தொடு உணர் பாதை அமைப்பு

image

கும்பகோணம் அஞ்சல் கோட்டத்துக்குட்பட்ட  தலைமை அஞ்சலகம் மகாமகக் குளம் அருகே செயல்பட்டு வருகிறது. திருச்சி மண்டலத் தலைவா் டி. நிா்மலா தேவி வழிகாட்டுதலின்பேரில் பாா்வையற்றோா் எளிமையாக அஞ்சலகத்தை அணுகும் வகையில் கும்பகோணம் தலைமை அஞ்சலகத்தில் பாா்வையற்றோருக்கான தொடு உணா் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையற்றோர் பிறர் துணையில்லாமல் அனைத்து சேவைகளையும் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2024

தஞ்சையில் புதிதாக மலிவு விலை மருந்தகம் திறப்பு

image

இந்தியாவில் இதுவரை 14 ஆயிரத்து 300 மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும் 1,270 கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. தஞ்சாவூா் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 53 கடைகள் உள்ளன.இந்நிலையில், தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் மலிவு விலை மருந்தகத்தை பிரதமா் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தார்.

News November 14, 2024

தனியார் விடுதிகள் பதிவு செய்ய ஆட்சியர் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மகளிர் தங்கும் விடுதிகள், ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களை நடத்தும் தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கள் விடுதியினை பதிவு செய்யாமல் உள்ள விடுதிகளுக்கு 7.12.2024 வரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை தவறும் பட்சத்தில் மேற்கண்ட விடுதிகளுக்கு சீல் வைக்க நேரிடும் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளனர்.

News November 14, 2024

தஞ்சை மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை

image

மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்டம் மேற்படிப்பு பயில பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி உதவிதோகை பெற மாணவர்கள் விண்ணப்பங்களை புதுப்பித்து பூர்த்தி செய்து 15.1.2025 க்குள் இதற்கான வலைதளத்தில் அனுப்பி வைக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளனர்.

News November 13, 2024

பூதலூரில் 2.8 மில்லி மீட்டர் மழைப்பொழிவு

image

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை மழைப்பொழிவு விவரம்: திருக்காட்டுப்பள்ளியில் 1.4 மில்லி மீட்டரும், திருவையாறில் 5 மில்லி மீட்டரும், தஞ்சாவூரில் 7.9 மில்லி மீட்டரும் கும்பகோணத்தில் 10.4 மில்லி மீட்டரும், பூதலூரில் 2.8 மில்லி மீட்டரும் வல்லத்தில் 2 மில்லி மீட்டர் ஒரத்தநாட்டில் 2.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது இன்றும் பல்வேறு பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 13, 2024

ரூ.1,500 கோடி சொத்துகளை அரசிடம் ஒப்படைத்த ஆதினம்

image

சூரியனார் கோவிலின் 28வது ஆதீனமாக மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் உள்ளார். இவர் பெங்களூரை சேர்ந்த ஹேமஸ்ரீ என்ற பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. மடத்தை விட்டு ஆதீனம் வெளியேற வேண்டும் என தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது. இதனால், ஆதீனம் பொறுப்பு நிர்வாகத்தை அரசிடம் ஒப்படைப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் எழுத்து பூர்வமாக ஆதீனம் எழுதி கொடுத்துள்ளார்.

News November 13, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் மூன்றாம் வெள்ளிக்கிழமை சிறு அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 15ம் தேதி காலை 10 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்  என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.