India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், கணவரை இழந்த பெண்கள் ஆகியவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் சுயதொழில் தொடங்கிட ஒரு பயனாளிகளுக்கு 50,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை விக்கிரவாண்டி நான்கு வழி சாலை பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை நாளை ஆய்வு செய்ய, போக்குவரத்து துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கும்பகோணம் வருகை தர உள்ளர். பின்னர் ஜெகநாதப்பெருமாள் கோயிலில் தரிசனம் செய்து
தஞ்சையிலிருந்து சோழபுரம் வரை சாலை பணி ஆய்வும்,
சோழபுரத்திலிருந்து சேத்தியாத்தோப்பு பகுதி வரை நான்கு வழி சாலை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.
பாபாநாட்டில் கடந்த மாதம் 12ஆம் தேதி இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு இளைஞர்கள் – இரண்டு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தஞ்சை ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் உத்தரவின்படி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாசன், பிரவீன், திவாகர் ஆகியோர் மீது ஆகிய மூன்று பேர் மீது குண்டர் பாய்ந்தது. உங்கள் கருத்துகளை COMMENT-ல் பதிவிடவும்.
பொது விநியோக திட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய புகார்களை அந்தந்த வட்டத்தில் வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் புகார் மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல அலுவலகத்தில் பணியாளா் குறை தீா் நாள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோரின் குறைகளை தீா்வு காணும் வகையில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மண்டல அளவில் பணியாளா்களின் குறைகள் தீா்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தஞ்சாவூா் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டது. இதில் காரும் லாரியம் நேருக்கு நேர் மோதியதில் கும்பகோணம் கருப்பூரை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் யாசர் அரஃபாத், முகமது அன்வர், ஹாஜிதா பேகம், ஸரபாத் நிஷா, அப்னான் என ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் மரணம் அடைந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் கவுன்சிலர் சுபா திருநாவுக்கரசு நினைவு கொடியேற்று நிகழ்ச்சி இன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம், தமிழக சட்டமன்ற தலைமை கொறடா கோவி. செழியன் திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர்கள் மற்றும் தி மு க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தஞ்சையில் கடனுதவி பெற்று சிறப்பாக செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களை மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் நேற்று ஆய்வு செய்தாா். தஞ்சாவூா் அருகே மணக்கரம்பையில் 2 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இத்தொழில்நுட்பப் பூங்கா மூலம் 300க்கும் அதிகமான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகிற 14, 15, 16 ஆகிய தேதிகள் தொடர் விடுமுறை, முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக கும்பகோணம் கோட்டத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 790 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரத்தநாடு அடுத்துள்ள மேல உளூர் கிராமத்தில் உள்ள கல்யாண ஓடை வாய்க்காலில் சுமார் 40 வயது பெண் ஒருவரின் உடல் நேற்று மிதந்து வந்துள்ளது. அதேபோல் பருத்திக்கோட்டை கிளை வாய்க்காலில் 25 மதிக்கத்தக்க இளைஞரின் உடலும் கரை ஒதுங்கியுள்ளது. இருவரின் உடலையும் மீட்ட வருவாய் துறையினர் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்கள் குறித்து ஒரத்தநாடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.