Thanjavur

News September 19, 2024

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.11 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

image

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவை சுற்றி யுள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் 16 பேர் தனியார் வங்கியில் விவசாய கடன் பெற்று விவசாயம் செய்து வந்தனர்.பயிர் இழப்பீடு வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக பாதிக்கப்பட்ட 16 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.11.1/4 லட்சம் வழங்குமாறு தனியார் வங்கிக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும் தஞ்சை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

News September 19, 2024

பாப்பாநாட்டில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு

image

ஒரத்தநாடு அருகே பாப்பாநாட்டில் கந்து வட்டி பணம் வசூல் செய்ய சென்ற பாப்பாநாடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் வட்டிக்கு பணம் பெற்றவரின் மனைவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் செந்தில்குமாரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 18, 2024

புதிய குடும்ப அட்டைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

பேராவூரணி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 11 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் இன்று வழங்கினார். அருகில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளனர்.

News September 18, 2024

மாணவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்க கூடாது: கலெக்டர் உத்தரவு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் முழு கொள்ளளவுடன் செல்வதால், ஆற்றில் இறங்கவோ – குளிக்கவோ கூடாது. மேலும் நீர்நிலைகளில் நின்று செல்பி எடுக்கக் கூடாது எனவும், கால்நடைகளை ஆற்றில் குளிப்பாட்ட கூடாது. குறிப்பாக பள்ளி – கல்லூரி மாணவர்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ – செல்பி எடுக்கவோ கூடாது என தெரிவித்துள்ளார்.

News September 18, 2024

விருதுநகருக்கு 2000 டன் நெல் அனுப்பி வைப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் ஏற்றப்பட்டு தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் அந்த நெல் மூட்டைகள் சரக்கு ரயிலின் 42 வேகன்களில் 2,000 நெல் மூட்டைகள் பொது விநியோகத் திட்டத்தில் வழங்குவதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

News September 18, 2024

தஞ்சை அருகே பாம்பு கடித்து விஏஓ உயிரிழப்பு

image

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரம்யா. இவர் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் வெளிப்புறத்தில் நடந்து சென்ற போது அவரை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரம்யா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News September 18, 2024

50% மானியத்தில் விதைகள் விநியோகம்: இணை‌ இயக்குநர்

image

தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இ.இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆடுதுறை 54, கோ 50, திருச்சி 3, கோ 52 ஆகிய ரகங்களின் சான்று பெற்ற விதைகள் அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு 50% மானியத்தில் வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

News September 18, 2024

கடலில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

image

மல்லிப்பட்டினத்தை சேர்ந்த பழனிவேல், விஜய், அரவிந்த் ஆகிய மூவரும் திங்களன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா். அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென கடலில் வீசிய சூறைக்காற்றால் அரவிந்த், விஜய் இருவரும் தவறி கடலுக்குள் விழுந்தனா். அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவா்கள், விஜய்யை மீட்டனா். இந்த நிலையில் புதுப்பட்டினம் கடலோரம் அரவிந்த் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

News September 17, 2024

பட்டுக்கோட்டை அரசு பள்ளியில் ஏற்பட்ட சோகம்

image

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (57). இவர் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், வகுப்பறையில் மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆசிரியர் உயிரிழந்தார்.

News September 17, 2024

கும்பகோணத்தில் பெண் அடித்து கொலை

image

கும்பகோணம் பத்தடி பாலம் கம்பன் நகரை சேர்ந்தவர் ராஜா (43), கூலி தொழிலாளி. செங்கல்பட்டை சேர்ந்த ஜாகிர் உசேன் மனைவி அம்சவள்ளி (40). ராஜாவுடன் திருமணத்தை மீறிய உறவில் 2 ஆண்டுகளாக அம்சவள்ளி இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அம்சவள்ளி தனது கணவரை காண சென்றுவிட்டு கடந்த 14-ஆம் தேதி கும்பகோணம் திரும்பியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ராஜா கட்டையால் தாக்கியதில் அம்சவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.