India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாபநாசம் துணை தாசில்தார் பிருந்தா, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட துணை தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலக கலைஞர் உரிமைத்தொகை திட்ட துணை இயக்குனர் சத்யராஜ் பாபநாசம் துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் நான்கு துணைத் தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாப்பாநாடு அருகே உள்ள திப்பியகுடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பட்டு (65). இன்று காலை அவருக்கு சொந்தமான வயலில் வேலை செய்வதற்காக சென்றபோது விஷ பாம்பு கடித்ததுள்ளது. இதனையடுத்து அவரை மீட்டு அவரது உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கும்பகோணத்தில் கடந்த 13ஆம் தேதி கடையின் பூட்டை உடைத்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் கொள்ளையடித்துள்ளதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணிக்கம் (ம) கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இருவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஊட்டச்சத்தை உறுதி செய் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ் தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,777 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் நேற்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்குவதற்கான சிறப்பு முகாம்கள் தஞ்சையில் இன்று (நவ.16) தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. திருத்தப் பணிகள் நவ.28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலின் படி பெயர் சேர்த்தல், திருத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் தனிநபர் கடன் சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் கைவினைக் கலைஞர்களுக்கு கடன் கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே தஞ்சையில் வசிக்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய சீக்கிய ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து சமர்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேதுபாவசத்திரம், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், சேதுபாவாசத்திரம், பெருமகளூா், நாட்டாணிக்கோட்டை, ஆதனூா், குருவிக்கரம்பை, திருவத்தேவன், கட்டயங்காடு, மதன்பட்டவூா், கள்ளம்பட்டி, நாடியம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குழந்தையை வளர்க்க விரும்பாதவர்கள் தயவுசெய்து குழந்தையை ஏதும் செய்து விட வேண்டாம். அதிகாரிகளை தொடர்பு கொண்டு விபரங்களை கூறுங்கள். உங்கள் தனிப்பட்ட விவரங்கள் பாதுகாக்கப்படும். தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் தொட்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த தொட்டிலில் போடப்படும் குழந்தையை வளர்த்து அரசு காப்பகத்தில் பராமரிக்கப்படும்.
கலை பண்பாட்டு துறை தஞ்சாவூர் மண்டலம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் சவகர் சிறுவர் மன்றம் சார்பாக மாவட்ட அளவிலான கலை போட்டிகள் குரலலிசை, பரதநாட்டியம், ஓவியம் (23.11.2024) அன்று தஞ்சாவூர் கீழவிதி, பழைய அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நடத்தப்பட உள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். போட்டி நடைபெறும் அன்று ஆதார் நகலுடன் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் டாக்டர் அம்பேத்கர் விருதுக்காக வழங்கப்படும் தொகை ரூ.5.65 லட்சத்திலிருந்து ரூ.5.80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இவ்விருது பெறுவதற்கு பட்டியலினத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பத்தை தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.