Thanjavur

News October 9, 2024

கும்பகோணத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

image

கும்பகோணம் அருகே பேட்டை வடக்கு தெருவில் அப்பகுதியில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான காவலர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்ட பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த 12 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.24,100 பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

News October 8, 2024

மாணவர்களுக்கு கையேடு வழங்கும் விழா

image

தஞ்சாவூர் மாவட்டம் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கற்றல் கையேடு வழங்கும் விழாவானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் நாகப்பட்டினம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இந்த கையேட்டினை வெளியிட்டது.

News October 8, 2024

தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் செயல்படும் மாவட்ட தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் சென்று ஆய்வு செய்தார். மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்ஹேமசந்த் காந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News October 8, 2024

மாவட்ட ஆட்சியர் பங்கேற்கும் மக்கள் நேர்காணல் முகாம்

image

திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை சரகம், திருமங்கலக்குடி கிராமம் ஈஸ்வரி மஹாலில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் எதிர்வரும் 09.10.2024 (புதன் கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

News October 8, 2024

தஞ்சை: பண்டிகை நாட்களை முன்னிட்டு 680 சிறப்பு பேருந்துகள்

image

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு பொது மக்களின் வசதிக்காக திருச்சி,தஞ்சாவூர், கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதியில் இருந்து சென்னை மற்றும் மறு மார்க்கத்தில் சேர்த்து 680 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

தஞ்சை: தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது – எச்.ராஜா

image

தஞ்சையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா கூறியதாவது, சென்னை விமான சாகச நிகழ்ச்சியை பார்க்கச் சென்ற 5 பேர் உயிரிழந்தனர்.. மருத்துவமனையில் 250க்கும் அதிகமானோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் குடிநீர் ஏற்பாடு செய்யப்படவில்லை. நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதில் தமிழக அரசு தோல்வியுற்றுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார். கருத்துக்களை COMMENTஇல் பதிவிடவும்.

News October 7, 2024

தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 7826012051, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

News October 7, 2024

தஞ்சை: பாலியல் குற்றவாளி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

புதுக்கோட்டையை சேர்ந்த கஞ்சா வியாபாரியான ராஜபாண்டியன், தவமணி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டனர். சீர்காழி பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர் பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர்கள் 3 போரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட எஸ்.பி., கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் மூவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

News October 6, 2024

தஞ்சை மாவட்ட தமிழ் அறிஞர்களுக்கு உதவித்தொகை

image

தஞ்சை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக தமிழுக்கு தொண்டாற்றி வரும் வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.4000 உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 58 வயது நிறைவடைந்து, ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்கும் தமிழறிஞர்கள், தாசில்தார் அலுவலகம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 6, 2024

தஞ்சை-சென்னை இன்டெர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்

image

திருச்சியில் இருந்து சென்னைக்கு தஞ்சை வழியாக பகல் நேரத்தில் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் அக்டோபர் 11-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக தஞ்சை எம்.பி முரசொலி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திருச்சியிலிருந்து அதிகாலை 5.35 புறப்பட்டு, தஞ்சைக்கு 6.25 மணிக்கு வந்தடையும் ரயில் கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி வழியாக தாம்பரத்திற்கு மதியம் 12.35 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.