India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது இயல்பை விட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாள்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நிகழாண்டு சித்திரை விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
பஞ்சமூா்த்திகளுடன் சந்திரசேகரா் கோயிலுக்குள் புறப்பாடாகி கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். தொடர்ந்து பிரமாண்ட கொடிமரத்தில் நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 92 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி என எதுவும் இல்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேராவூரணி அருகே பெருமகளூரில் போலி மது விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று நடைபெற்ற சோதனையில், பிரபல கம்பெனிகளின் பெயரில் போலி லேபிள் ஒட்டப்பட்ட 620 மதுபாட்டில்களையும், 680 லி. எரிசாராயத்தையும் பறிமுதல் செய்த போலீசார் குழியில் ஊற்றி அழித்தனர். இது தொடர்பாக தீனா, பாலமுருகன், சேகர், வீரன், ராஜ்குமார், சங்கர் ஆகிய 6 பேர் கைதாகினர்.
தஞ்சை மாவட்டம் முழுவதும் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் 21,421 பேர் உள்ளனர். இவர்களில் 2,446 பேர் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான படிவம் பெற்றுள்ளனர். அதேபோல் மாற்றுத்திறனாளிகள் 12,294 பேர்களில் 5,067 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து அதற்கான படிவங்களை பெற்றுள்ளனர். நேற்று தபால் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வீடுகளுக்கே சென்று அலுவலர்கள் வாக்கு சேகரித்தனர்.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு மாநகராட்சி சார்பில் 100 சதவீத நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பலூன் பறக்கவிடப்பட்டது. நாடாளுமன்ற பொது பார்வையாளர் கிகேட்டோ சேம இன்று 5-4-24 பார்வையிட்டார்.
மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையம், இந்திய அஞ்சல் துறை ஒருங்கிணைந்த நடவடிக்கை மற்றும் மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவர் அறிவுறுத்தலின் படி தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் 100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பேரணி தலைமை தபால் நிலையம் முன்பு இன்று 5.4.24 உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி விஷ்ணு பிரியா துவக்கி வைத்தார். அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தங்கமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து, பட்டுக்கோட்டையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று(ஏப்.5) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ” I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றவுடன் ரூ.500க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும்; தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்” என வாக்குறுதி கொடுத்தார்.
தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(ஏப்.4) பிரசாரம் செய்தார். இதற்காக திமுக சார்பில் வரவேற்க அண்ணாசாலை, பனகல் கட்டடம் சாலையில் திமுக கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. இதற்கு உரிய அனுமதி பெறாமல், தேர்தல் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்ததால் திமுக மற்றும் கூட்டணி கட்சி கொடிகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.