India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.பாபு கும்பகோணம் மேற்கு ஒன்றியம் பகுதியில் நேற்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது கடை வீதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் வேட்பாளர் பி.பாபு தானே பஜ்ஜி சுட்டுக்கொடுத்து கடைக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் வாக்கு சேகரித்தார்.
தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி வரை) தஞ்சாவூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராவூரணியில் சமூக ஆர்வலரான தக்ஷிணாமூர்த்தி 100% வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென தனது ஆள்காட்டி விரலை பின்புறமாக மடக்கி உலக சாதனை நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவன அதிகாரி நாகராஜன் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 82 வினாடிகளிலேயே 100 தடவை ஆள்காட்டி விரலை மடக்கி உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று(மே.7) திருவையாறு பகுதியில் உள்ள தில்லைஸ்தானம், கண்டியூர் உள்பட முக்கிய இடங்களில் மருவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய் சங்கர், ஏட்டு பார்த்திபன் மற்றும் துணை ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.
திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று இரவு செங்கை மறை மாவட்டம் போரூர் நுகும்பல் அருள்தந்தை. அலெக்ஸாண்டர் வழிகாட்டலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 5.30 மணிக்கு அருள்பொழிவு திருப்பலி நடைபெற்றது. 7.00 மணிக்கு எரியும் மெழுகுத்திரியுடன் சிறப்பு செபமாலை தேர்பவனி நடைபெற்றது. பின்னர் குணமளிக்கும் நற்செய்தி செப வழிபாடும், ஆசீர் வழங்குதலும் நடைபெற்றன.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் அருகே நேற்று(ஏப்.6) மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 4 சக்கர வாகனத்தில் இறந்து 2 நாளான பசு ஒன்றை, வைக்கோல் வைத்து மறைத்து எடுத்து சென்ற நிலையில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். சந்தேகமடைந்த போலீசாரின் தீவிர விசாரணையில், உணவகத்திற்கு இறைச்சிக்கு சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பயிற்சி நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, நேற்று(ஏப்.6) மாவட்டத்திலுள்ள வெடிகுண்டு துப்பறிதல் மற்றும் அகற்றும் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்து கூடுதலாக 20 நபர்களுக்கு வெடிகுண்டு துப்பறிதல் மற்றும் அகற்றும் படையினரால் தீவிர செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று(ஏப்.7) தொடங்கியது. இந்த சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழவான தோராட்டம , விழாவின் 15வது நாள், அதாவது வருகிற 20ம் தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று காலை 7 மணிக்கு மேல் 7.20 மணிக்குள் தேர் வடம்பிடித்து இழுக்கப்படுகிறது.
தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வட்டம், திருப்பாலத்துறை ஸ்ரீ தவள வெண்ணகை அம்மன் உடனுறை ஸ்ரீ பாலைவனநாதா் கோயிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு நேற்று(ஏப்.6) மாலை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் ஸ்ரீ பாலைவனநாதா், தவளவெண்ணகை அம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து நந்தியெம்பெருமானுக்கு மங்களப் பொருள்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.