Thanjavur

News October 12, 2024

தஞ்சை மாவட்டத்தின் மெய் சிலிர்க்க வைக்கும் வரலாறு

image

தஞ்சை என்பதற்கு ‘குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி’ என்று பொருள் ஆகும். தஞ்சை 8-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். இப்பகுதியினை சிறப்பாக ஆண்ட தனஞ்சய முத்தரையர் பெயரையே, இந்நகரம் பெயராகப் பெற்றது. தமிழகத்தின் ‘நெற்களஞ்சியம்’ என்று அழைக்கப்படும் தஞ்சை மாவட்டத்தில் ஆண்டுக்கு 3.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாய பணிகள் நடைபெறுகின்றன. இது தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 25 சதவீதமாகும்.

News October 12, 2024

தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களிலும் தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 11, 2024

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்ப சுற்றுலா.

image

உலக மனநல தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் மூலம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் உத்தரவின் பேரில்; வடக்கு வாசல் அன்பாலயத்தை சேர்ந்த 25 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்ப சுற்றுலா ஏற்பாடு இன்று செய்யப்பட்டது. பெரிய கோவில், அரண்மனை வளாகம், ராஜாளி பறவைகள் பூங்கா, தஞ்சாவூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களை கண்டு களித்தனர்.

News October 11, 2024

அங்காள பரமேஸ்வரி கோயிலில் திருவிளக்கு பூஜை

image

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை அங்காள பரமேஸ்வரி கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு முப்பெரும் தேவியரை வரவேற்கும்விதமாக 108 திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. 108 பெண்கள் குத்துவிளக்குடன் வந்து கோயில் வளாகத்தில் விளக்கு பூஜை நடத்தினா். பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மங்கலப் பொருள்கள் மற்றும் பிரசாதங்களை கோயில் அறங்காவலா் பி. செந்தில்வேலன், எஸ்.பி. கதிரவன் ஆகியோா் வழங்கினா்.

News October 10, 2024

மறைந்த வணிகரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

image

நந்தனம் வணிகவரி வளாக கூட்டரங்கில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தமிழ்நாடு வணிகர் நல வாரியம் சார்பாக மறைந்த வணிகரின் குடும்பத்தினரான பட்டுக்கோட்டையை சார்ந்த க.சந்தானலெட்சுமி அவர்களுக்கு குடும்ப நல நிதி உதவித் தொகையாக ரூ.3,00,000/- காசோலை மற்றும் கும்பகோணத்தை சார்ந்த வி.இராஜசேகர் அவரவர்களுக்கு மருத்துவ நிதி உதவித் தொகையாக ரூ.50,000/- காசோலைகளை வழங்கினார்.

News October 10, 2024

தஞ்சை: பருவமழை பாதிப்பு குறித்து தெரிவிக்க புகார் எண் வெளியீடு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செய்லபடும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடர்பான பாதிப்பு குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 04362-230121 மற்றும் வாட்ஸ்ஆப் எண் 9345088997 ஆகிய எண்களை பயன்படுத்திக் கொள்ளமாறு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

News October 10, 2024

வடகிழக்கு பருவமழை தயார் நிலையில் தஞ்சை மாவட்டம் – ஆட்சியர்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதை ஒட்டி மாவட்டத்தில் 51 மழைமானிகள், 19 முன்னெச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள், 4,550 முதல்நிலை மீட்பாளர்கள், 300 ஆப்தமித்ரா தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டி – ஆட்சியர் தகவல்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் நடைபெறும் இந்த போட்டி வருகிற 29ஆம் தேதி நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன் கடையில் பணிபுரிய வாய்ப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளில் உள்ள விற்பனையாளர் (Salesman), கட்டுநர்கள் (Packer) ஆகிய 93 பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இப்பணிக்கு www.drbtnj.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ.7ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்.

News October 10, 2024

தேசிய கபாடி போட்டிக்கு தஞ்சை மாணவன் தேர்வு

image

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும், தேசிய அளவிலான 14 வயதிற்கு உட்பட்ட கபாடி போட்டிக்கான தமிழ்நாடு மாநில அளவிலான தெரிவு போட்டியானது சத்தியமங்கலம் அரசு பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் அய்யம்பேட்டை அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் நிகிலன் என்ற மாணவர் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றுள்ளார்.