Thanjavur

News March 25, 2024

தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி

image

திருவையாறு சாலையில் கூத்தூர் கிராமத்தின் அருகில் திருவையாறு ஏடிஎஸ்ஓ தலைமையிலான பறக்கும் படை  குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷ்ணம் பேட்டையை சேர்ந்த கனகராஜ் என்பவர் வந்த மோட்டார் சைக்கிளை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.67080 ரொக்கத்தை கைப்பற்றி திருவையாறு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுதாராணியிடம் ஒப்படைத்தனர்.

News March 25, 2024

மதுக்கூர் அருகே தேர்தல் புறக்கணிப்பு!

image

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பகுதியில் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகளை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 3,650 பேர் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்; எங்கள் உரிமை எங்களுக்கு வேண்டும்; மதுக்கூர் வடக்கு பகுதிக்கு வாக்கு சேகரிக்க வர வேண்டாம் என்ற போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 25, 2024

தேர்தல் திருவிழா : வேட்பு மனு தாக்கல்

image

மக்களவை தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20ல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கிய கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News March 25, 2024

திருநாகேஸ்வரம்: வீரபத்திரசாமி கோயில் கும்பாபிஷேகம்

image

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் வீரபத்திரசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 44 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டது. கடந்த 22ம் தேதி முதல் யாக சாலை பூஜைகள் தொடங்கின. நேற்று காலை 4வது கால யாக சாலை பூஜைகள் நடந்தது. இதனையடுத்து சிவாச்சாரியார்கள் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

News March 24, 2024

பாபநாசத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வரப்பட்டது…!

image

இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவைத் தேர்தலுக்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கிடங்கில் இருந்து பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குரிய மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள்
கனரக வாகனம் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் இறக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

News March 24, 2024

நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு

image

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, தஞ்சையில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 24, 2024

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோவில் தேரோட்டம்

image

திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான நடுக்கம் தீர்த்த பெருமான் எனும் கம்பகரேஸ்வரர் கோவில் உள்ளது. சரபேஸ்வரர் தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவிலில் உருத்திர பாத திருநாள் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து தினமும் சாமி வீதி திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

News March 23, 2024

ஸ்டாலினை பார்த்ததுமே.. பூரித்த தஞ்சாவூர்!

image

லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், திமுக அனைத்து தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சாலையோர கடையில் தேநீர் அருந்தினார்.

News March 23, 2024

தஞ்சை அருகே தேரோட்டம்

image

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ பெரிய நாயகி சமேத நாகேஸ்வரன் திருக்கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னதாக சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருள சிறப்பு ஆராதனை நடைபெற்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

News March 23, 2024

தஞ்சையில் நடைபயணமாக சென்ற முதலமைச்சர்

image

தஞ்சையில் இன்று காலை நேரத்தில் முதலமைச்சர் நடைபயணம் மேற்கொண்டபடி வாக்கு சேகரித்தார்.சத்யா விளையாட்டு மைதானம், காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை முதலமைச்சர் சந்தித்தார். அப்பகுதியில் பொதுமக்கள் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

error: Content is protected !!