Thanjavur

News March 27, 2024

தஞ்சாவூர்: புகார் செய்ய எண்கள் அறிவிப்பு

image

தஞ்சாவூரில் தேர்தல் நடத்தை விதிமீறல் குறித்த புகார்களுக்கு, பொதுப் பாா்வையாளரான கிகேட்டோ சேமவை 93639 70331 என்ற எண்ணிலும், தேர்தல் செலவினங்கள் தொடா்பாக செலவின பாா்வையாளரான ஜன்வி திவாரியை 93639 62884 என்ற எண்ணிலும், சட்டம் – ஒழுங்கு மற்றும் சட்டத்துக்கு புறம்பான விதிமீறல்களுக்கு காவல் பாா்வையாளரான சரணப்பாவை 93639 72586 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்

image

தஞ்சாவூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ம் தேதி ஆரம்பித்து நிலையில் இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

News March 27, 2024

தஞ்சை அருகே ரூ.63 ஆயிரம் பறிமுதல்

image

தஞ்சை, கண்டியூர் – திருக்காட்டுப்பள்ளி சாலையில் திருவாழம்பொழில் பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி கஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த குத்தாலம் பகுதியை சேர்ந்த ஜெகன் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் ரூ.63,000 பணம் இருந்தது தெரியவர, உரிய ஆவணமில்லாத அந்த பணத்தை பறிமுதல் செய்து திருவையாறு தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

News March 27, 2024

தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு!

image

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(மாரச் 27) காலை 10 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, ராம்நாடு, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

தஞ்சாவூர் மாவட்டம்: 718 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தொடங்கிய நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் 29 ஆயிரத்து 71 பேர் பங்கேற்று எழுதினா்; 718 பேர் தேர்வு எழுத வரவில்லை; தஞ்சாவூா் மேம்பாலம் அரசு பாா்வையற்றோா் பள்ளியில் பாா்வை குறைபாடுடைய 19 மாணவா்களும், செவித்திறன் குறைபாடுடைய 23 மாணவா்களும் தேர்வு எழுதினா். இவா்களுக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.

News March 26, 2024

“இந்தியா கூட்டணி ஆட்சி உறுதியாக அமையும்”

image

தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “பா.ஜ.க 3-வது முறையும் ஆட்சி அமைத்தால், இதுதான் கடைசி தேர்தல் என்கிற சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதை காஷ்மீர் முதல் குமரி வரை உள்ள மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, வருகிற தேர்தல் மூலம் இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதைத்தான் மக்கள் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன” என கூறினார்.

News March 26, 2024

பேராவூரணியில் தோப்புக்கரணம் செய்து உலக சாதனை

image

பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் கோவில் வளாகத்தில் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது. இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் பிரதிநிதி நாகராஜன் முன்னிலையில் பேராவூரணியை சேர்ந்த ஜெ. மணிகண்டன் என்பவர் 18 நிமிடங்களில் 558 தோப்புக்கரணம் செய்து சாதனை படைத்தார். அவருக்கு அதற்கான சான்றிதலும் கேடயமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் கலந்துகொண்டார்.

News March 26, 2024

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனுதாக்கல்

image

வரும் மக்களை தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக தஞ்சாவூர் தொகுதியின் வேட்பாளராக ஹீமாயூன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

News March 26, 2024

பாபநாசத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

image

பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நேற்று(மார்ச் 25) நடைபெற்றது. இதில், மயிலாடுதுறை கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இவ்வகுப்பில், வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து காட்சி வழியாகவும், செயல்முறை வழியாகவும் பயிற்சி வழங்கப்பட்டது.

News March 26, 2024

தஞ்சாவூர் அருகே செவிலியர் தற்கொலை 

image

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள ஒக்கநாடு மேலையூரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் அபிநயா(24). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் அபிநயாவை வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அபிநயா நேற்று(மார்ச் 25) வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரரித்து வருகின்றனர்.

error: Content is protected !!