India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் தொழில் பயிற்சி நிலைய மைதானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரணை செய்ததில், ஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஸ்டாலின், சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேரை கைது செய்து, 63 கிராம் கஞ்சா (ம) 11,000 ரொக்கம் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்வி கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 350 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அய்யம்பேட்டை மின்சார துறை அலுவலகத்தின் வருவாய் மேற்பார்வையாளர் மணிகண்டன் வணிக இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்ற 1500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிரியர் பாலமுருகன் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் தந்துள்ளார். 1500 ரூபாய் லஞ்சம் பெற்றபோது
தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவாய் ஆய்வாளர் மணிகண்டனையும், லஞ்சப் பணத்தை பெற்றுத்தந்த ஒப்பந்ததாரர் சுதாகரையும் கைது செய்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் அக்.15 மற்றும் 16-ஆம் தேதி (செவ்வாய், புதன்கிழமை) கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை (ஆரஞ்சு அலெர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிடைமருதூர் அருகே கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் உள்ள கோவிந்தபுரத்தில் தனியார் கல்லூரி பேருந்தும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் மினி லாரி டிரைவர் உள்பட இருவர் பலியாகினர். பேருந்தில் வந்த கல்லூரி மாணவர்கள் 20க்கு மேற்பட்டோருக்கு பலத்த காயம் அடைந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தஞ்சை வடக்கு வாசல் A.Y.A நாடார் சாலையில் நேற்று இரவு இரு பிரிவினர் மோதிக்கொண்டனர். அவர்களை விலக்கி விட 7வது வார்டு கவுன்சிலர் விஜயபாபு சென்றார். அப்போது விஜயபாபுவை சிலர் அரிவாளால் வெட்டி உள்ளனர். காயம் அடைந்த கவுன்சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேராவூரணி அருகே ஆற்றுக்குள் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம். திருச்சிற்றம்பலம், சித்துக்காடு வடக்கு கிராம வழியாக செல்லும் கல்லனை வாய்க்காலில் பாலத்தின் அடியில், பெண் சடலம் அழுகிய நிலையில் நேற்று கிடந்தது. தகாவாலறித்து அங்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், இதுகுறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தஞ்சை மாவட்ட எஸ்.பி உத்தரவின்படி, உட்கோட்ட போலீசார் தினமும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் சட்டவிரோதமாக மது விற்ற 9 பேர், ரவுடி பட்டியலில் உள்ள 2 பேர், நீதிமன்ற பிடி கட்டளை நிறைவேற்றப்பட்டு தலைமறைவாக இருந்து வந்த ஒருவர் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் கடத்தல் மற்றும் குற்ற செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூர் வடபத்ர காளியம்மன் கோயிலில் நேற்று விஜயதசமியை முன்னிட்டு வடபத்ர காளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. காளியம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் மேல அலங்கம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாப்பாநாடு காவல் சரக்கத்திற்கு வேளாங்கண்ணி குளக்கரை, ஆம்பலாப்பட்டு அருகில் போதைப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக பி [ போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவலர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்கு வைத்திருந்த 5.295 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.