India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.70 லட்சம் பறிமுதல் செய்யபட்டுள்ளது. பாலாஜி என்பவர் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அடுத்த மாதம் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆதலால் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கும்பகோணம் அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று(மார்ச் 18) நடந்தது. இவ்விழாவில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ஜி.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் பேருரை ஆற்றினார். முதுநிலை பொறியியல் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங், தெர்மல் இன்ஜினியரிங் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய துறைகளிலும் மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. இந்த தொகுதிகளில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட பழனி மாணிக்கம் வெற்றி பெற்று எம்பியானார். இவர் 1996, 1998, 1999, 2004, 2009 மற்றும் 2019 ஆண்டு என் 6 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் எனவும், தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக ஏப்.19ம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் நேற்று(மார்ச் 17) பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக் ஜேக்கப் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினருடன் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (17.03.2024) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்களை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேர்தல் பறக்கும் படை வாகனத்தினை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தீபக் ஜேக்கப் நேற்று (மார்ச் 16) தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தேர்தல் பறக்கும் படை வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக் ஜேக்கப் அவர்கள் நேற்று (16.03.2024) துவக்கி வைத்து கண்காணிப்பு கேமராவின் செயல்பாட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
மக்களவை தேர்தலை முன்னிட்டு தஞ்சையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்த கூட்டம் இன்று(மார்ச் 16) கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், வருவாய் அலுவலர், தனி மாவட்ட வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சறுக்கை பகுதியில், இன்று காரின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியதில், லால்குடி திண்ணியம் பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் மாரியம்மன் கோயில் ஊராட்சி புளியந்தோப்பு பகுதியில் நீர்வளத்துறை சார்பில், சமுத்திரம் ஏரியில் ரூ.8.84 கோடி மதிப்பில் புதிதாக சிறுவர் பூங்கா கட்டப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று (16.03.2024) திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் , சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.