India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை மாவட்டத்தில் ஜூலை 2021 முதல் ஏப்ரல் 2024 வரை கும்பகோணம் மண்டலத்தில் உள்ள அரசு டவுன் பஸ்களில் மகளிர் பயனாளிகள் 14 கோடியே 79 லட்சத்து 93 ஆயிரத்து 735 பேரும், மாற்றுத்திறனாளிகள் 8 லட்சத்து 45 ஆயிரத்து 192 பேரும், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் 37 ஆயிரத்து 315 பேரும், திருநங்கைகள் 68 ஆயிரத்து 186 பேரும் என மொத்தம் 14 கோடியே 89 லட்சத்து 44 ஆயிரத்து 428 பயனாளிகள் கட்டணமில்லா பஸ் பயணம் செய்தனர்.
குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 2023 – 2024ஆம் ஆண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை பருவத் தேர்வு முடிவுகள் இன்று மாலை www.kngac.ac.in என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மறுகூட்டல் மற்றும் ஒளிநகல் பிரதிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 06.06.2024, மறுமதிப்பீட்டுக்கு கடைசி நாள், 08.06.2024, உடனடி தேர்விற்கு 11.06.2024 கடைசிநாள் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தஞ்சை பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் அமைப்பின் இந்திய தேசிய இயக்குனராக இருந்து வருகிறார். இவரது இல்லத்திற்கு இலங்கை இளைஞர் பாராளுமன்றம் வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் நேற்று வந்தார். அப்போது அவர், “இலங்கை பொருளாதாரத்தில் நலிவடைந்த போது இந்தியா தான் அதிக நிதி உதவிகளை வழங்கியது” எனக் கூறினார்.
கும்பகோணம் ஒன்றியம் கள்ளப்புலியூர் ஊராட்சி மணஞ்சேரி கிராமம் இராமன் உதவி பெறும் தொடக்கப்பள்ளி முகவர் மற்றும் செயலர். ச ஜெயக்குமார் இன்று அவரது பள்ளியை தருமையாதீன குருமணிகள் வசம் ஒப்படைத்தார். தொடரந்து இப்பள்ளிக்கு கும்பகோணம் கார்த்திகேயன் என்பவரை செயலராக நியமித்து உத்திரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தருமபுரம் ஆதீனம் அருட்பிரசாதம் வழங்கினார்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் தஞ்சாவூர் மாவட்டம் 27 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 83.39% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 73.33 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.98 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.14) வெளியாகியுள்ளன. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள் 83.37% பேரும், மாணவியர் 94.09% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 89.07% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. தஞ்சை மாவட்டம் 27வது இடத்தை பிடித்துள்ளது.
தென்மாநில பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதனால், தஞ்சை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று காலை 10 மணி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், ஆடுதுறை திருமங்கலக்குடி, நரசிங்க பேட்டை, திருபுவனம் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் வெப்பம் தனிந்து இதமான சூழல் நிலவுகிறது. மேலும் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.