India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் தஞ்சை தொகுதியில் மொத்தம் 68.18 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் முரசொலி, அதிமுக சார்பில் சிவநேசன், பாஜக சார்பில் எம்.முருகானந்தம், நாம் தமிழர் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படும் சலுகைகளை பெறுவதற்கான அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. 11ஆம் தேதி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், 18 ஆம் தேதி கும்பகோணத்திலும், 25ஆம் தேதி கிராமசபை கட்டிடம் பட்டுக்கோட்டையிலும் நடைபெறுகிறது. முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டை பெற்றுக் கொள்ள மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் எண்ணப்பட உள்ளது. இதில், மன்னார்குடி 20 சுற்றுகளாகவும் , திருவையாறு 22 சுற்றுகளாகவும் , தஞ்சாவூர் 21 சுற்றுகளாகவும் , ஒரத்தநாடு 21 சுற்றுகளாகவும் , பட்டுக்கோட்டை 20 சுற்றுகளாகவும் , பேராவூரணி 19 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குக்கு 8 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் 306 அலுவலர்கள், 102 நுண் பார்வையாளர்கள், 102 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், 102 உதவியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை ஊராட்சி, லட்சுமிபுரத்தில் உள்ள ஸ்ரீ மதுர காளியம்மன் கோயிலில் 16 ம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது.
விழாவையொட்டி பக்தர்கள் பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றில் இருந்து பால்குடம், அலகு காவடி எடுத்து ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
குரூப் 4 தேர்வு வருகிற 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 223 தேர்வு மையங்களில் 65,520 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் நடைபெறும் நிகழ்வுகளை காலை 7 மணி முதல் பிற்பகல் 1:30 மணி வரை பதிவு செய்து தேர்வுகூட முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இப்பணிக்கு ரூ.2,500 ஊதியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள வீடியோகிராபர்கள் ஆட்சியர் அலுவலகத்தை அணுக தெரிவிக்கப்பட்டுள்ளது
தஞ்சை மாவட்டத்தில் தொடர்ந்து நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பூதலூரில் 1.6 மி.மீ, தஞ்சாவூரில் 5 மி.மீ, பாபநாசத்தில் 1.2 மி.மீ, கும்பகோணத்தில் 20 மி.மீ, வல்லத்தில் 19மி.மீ, அயன்குடியில் 12 மில்லி மீட்டரும், குருங்குளத்தில் 17 மில்லி மீட்டரும், அதிராம்பட்டினத்தில் 0.8 மில்லி மீட்டர் மழை இன்று காலை 6 மணி வரை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ் பண்பாட்டை வளர்க்க தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தமிழ் பண்பாட்டு மையமும், அமெரிக்காவின் கேரோலைனா தமிழ் கலை கூடமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் முன்னிலை வகித்தார். தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் தியாகராஜன், கேரோலைனா தமிழ் கலை கூடப் பொறுப்பாளர் கண்ணன் ஆகியோர் ஒப்பந்த ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.
மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்லூரி முழுவதும் மூன்றடுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் 24மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு குறித்து பணி குறித்து கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.