India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாபநாசம் உட்கோட்ட பகுதியில் 7 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து குளியலறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்த புகார் தொடர்பாக போக்சோ வழக்கில் சூலமங்கலத்தை சேர்ந்த பரத் (25) என்பவர் கடந்த 2022ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன், பரத் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தஞ்சை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து புதுப்பித்து இருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் விண்ணப்ப படிவத்தை tnvelaivaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் இந்த விண்ணப்பத்தில் உள்ள அனைத்து கலங்களையும் முறையாக நிரப்பி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கொடுத்து பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 11.10.2024 (மு) 15.10.2024 வரை சட்டத்திற்கு புறம்பாக போதை பொருட்கள் வைத்திருந்ததற்காக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று இறைநெறி இமயவன் வழிகாட்டுதலோடு கூட்டு வழிபாடு மற்றும் கிரிவலம் நிகழ்ச்சி நடந்து வருகிறது அந்த வகையில் இன்று மாலை ஆறு மணிக்கு புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் நிகழ்ச்சி ஆடுதுறை பாலன் சிட்பண்ட்ஸ் மோகனசுந்தரம் தலைமையில் நடக்கிறது.
பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் எதிர்வரும் 19.10.2024 சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெற ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களை புகார் தெரிவிக்க காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட “உரக்கச்சொல்” என்ற செயலி மூலம் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் பயன்படுத்தி சட்டவிரோத செயல்களை புகாராக தெரிவித்து வருகின்றனர். இந்த செயலியை பயன்படுத்தி பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது என காவல் கண்காணிப்பாளர் செய்தி வெளியிட்டுள்ளார்.
பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில்
அரவிந்தன் என்பவர் வேலையை முடித்துவிட்டு தான் தங்கி இருந்த மரப்பட்டறையின் மாடிக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த பைப் லைனில் அவர் கை வைத்த போது அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அரவிந்தன் மயங்கி விழுந்தார். பட் டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
அம்மாப்பேட்டை, உடையார்கோயில், சாலியமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது நெற்கதிர்கல் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்தனர். மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.
தஞ்சை பெரிய கோவிலில் இன்று பௌர்ணமியை முன்னிட்டு நடைபெற இருக்கும் தென்கயிலாய வளத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளை தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் நேற்று இரவு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி ஆணையர் உட்பட பலர் இருந்தனர்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘டெல்டா’ மாவட்டங்களில் தொழில் வளத்தைப் பெருக்க வேண்டு் என்ற பெயரில் விவசாயிகளையும், பொதுமக்களையும் பாதிக்கக் கூடிய, கடல், நீா் வளத்தை மாசுபடுத்துகிற தொழிற்சாலைகளை தமிழ்நாடு அரசு கொண்டு வரக்கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.