India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடைகாலத்தில் உடலில் ஏற்படும் நீர் இழப்புகளை தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பது தர்பூசணி. இதனால் கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை ஈடு செய்வதற்காக அதிக அளவில் மக்கள் வாங்கி சென்றனர். கடந்த காலங்களில் 1 கிலோ தர்பூசணி பழம் ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்து 1 கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேட்டூர் அணையில் 44.17 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 656 கனஅடி தண்ணீர் வரத்தும், குடிநீருக்காக 2,103 தண்ணீர் திறப்பும் உள்ளது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து காவேரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், ஆகிய ஆறுகளில் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு இல்லை. மேலும் குடிநீர் தேவைக்காக கொள்ளிடம் ஆற்றில் மணற்போக்கி வழியாக வினாடிக்கு 1,440 கன அடி தண்ணீர் வீதம் திறக்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, கல்லணையில் 10.4 மி.மீ, திருக்காட்டுப் பள்ளியில் 6.2 மி.மீ, திருவையாறில் 3 மி.மீ, தஞ்சாவூரில் 2மி.மீ, பாபநாசத்தில் 9 மி.மீ, கும்பகோணத்தில் 2.4 மி.மீ, பூதலூரில் 9.6 மி.மீ, வல்லத்தில் 12 மி.மீட்டரும், குருங்குளத்தில் 2 மி.மீட்டரும் இன்று காலை வரை மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் 19 மி.மீ, வல்லம் 20 மி.மீ, குருங்குளம் 16.30 மி.மீ, திருக்காட்டுப்பள்ளி 40 மி.மீ, பாபநாசம் 25 மி.மீ, கும்பகோணம் 13.20 மிமீ, நெய்வாசலில் 11.80 மி.மீ மழை பதிவானது. அதிகபட்சமாக திருவையாறில் 45 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 288.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தின் துணிநூல் துறையில் புதிய வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக 10 மற்றும் +2 படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் பயிற்சி அளிக்க உள்ளது. இப்பயிற்சியினை பெற விரும்புவர்கள் <
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இதையடுத்து, அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதற்கு அதிமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் தஞ்சையை சேர்ந்த நிர்வாகி ஒருவர் சின்னம் மட்டுமே இருந்தால் வெற்றி பெற முடியாது – சின்னம்மா இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என போஸ்டர் ஒட்டியுள்ளது வைரல் ஆகியுள்ளது
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தஞ்சாவூர் உட்பட 10 மாவட்டங்களில் இன்று(ஜூன் 6) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
தஞ்சாவூர் வடக்கு வாசல் பகுதியை சேர்ந்த தம்பதி மெய்யழகன்(43) – மல்லிகா(33). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் மல்லிகா குழந்தைகளுடன் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஜூன் 4 அன்று திடீரென மெய்யழகன் உயிரிழக்கவே , இதைகேட்டு ஊர் திரும்பிய மல்லிகாவும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் முரசொலி – 5,02,245 வாக்குகள்
*தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் – 1,88,662 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் முருகானந்தம் – 1,70,613 வாக்குகள்
*நாதக வேட்பாளர் ஹூமாயூன் கபீர் – 1,20,293 வாக்குகள்
Sorry, no posts matched your criteria.