Thanjavur

News June 22, 2024

சிபிஐ கட்சியின் சாலை மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

image

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் விழுதியூர் ஊராட்சியில் விழுதியூர் மாணவர்களும் பொதுமக்களும் தற்போது 15 கிலோமீட்டர் சுற்றி அம்மாபேட்டைக்கு வர வேண்டி உள்ளது. இந்த நிலையில் ஐவேலிதோட்டத்தில் வெண்ணாற்றில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக வெண்ணாற்று கரையில் சாலை அமைக்க கோரி நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டமானது அமைதி பேச்சு வார்த்தைக்கு பின் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

News June 21, 2024

தஞ்சாவூர்: திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் 

image

தஞ்சாவூர் மாவட்டம் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாமில் திருநங்கைகள் பங்கேற்று அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை பெற்று பயனடையுமாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார். 

News June 20, 2024

சிறுபான்மையினருக்கான கடன்கள் வழங்கல் 

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் தனிநபர் கடன், கல்வி கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த, பார்சி (ம) ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தியுள்ளார்.

News June 20, 2024

திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் 

image

தஞ்சாவூர் மாவட்டம் சமூக நலத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகிற 21ஆம் தேதி நடைபெறுகிறது. இச்சிறப்பு முகாமில் திருநங்கைகள் பங்கேற்று அடையாள அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை பெற்று பயனடையுமாறு கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார். 

News June 20, 2024

தஞ்சாவூர் கலெக்டர் ஆய்வு

image

தஞ்சாவூர் மாவட்டம் அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் தீபக் ஜேக்கப் இன்று(20.6.24) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உதவி கலெக்டர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ் உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் பலர் உள்ளனர்.

News June 20, 2024

காங்கிரஸ் சார்பில் மாபெரும் ரத்த தான முகாம்

image

தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி எம்பி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி ஆர் லோகநாதன் தலைமையில் நேற்று(ஜூன்19) கும்பகோணம் காங்கிரஸ் அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமினை மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர் .சுதா துவங்கி வைத்தார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

News June 20, 2024

பொது மக்களுக்கான சிறப்பு மனு விசாரணை முகாம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(ஜுன்19) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி தஞ்சாவூர்,பாபநாசம்,திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், வல்லம், ஒரத்தநாடு ஆகிய உட்கோட்டங்களில் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் பொதுமக்களுக்கான சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு சுமார் 308 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

News June 20, 2024

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு.

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த மழையளவு. தஞ்சாவூர் 34 மிமீ, வல்லம் 20 மிமீ, குருங்குளம் 36.20 மிமீ, திருவையாறு 23 மிமீ, கும்பகோணம் 26 மிமீ, பாபநாசம் 40 மிமீ, கீழ் அணை 54.80 மிமீ, அய்யம்பேட்டை 24 மிமீ, ஈச்சன்விடுதி 12.40 மிமீ, பூதலூர் 15.60 மிமீ பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 317.80 மிமீ அளவிற்கு பதிவாகியுள்ளது.

News June 19, 2024

காவல்துறை சார்பில் புகார் மனு மேளா

image

தஞ்சாவூர், கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி துணைக்காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன் தலைமையில் காவல்துறையில் பல்வேறு புகார் மனுக்களை பொதுமக்கள் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் சிவ.செந்தில்குமார், ஜெகதீசன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஒருங்கிணைப்பில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News June 19, 2024

தஞ்சையில் வேலைவாய்ப்பு முகாம்

image

வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதம்தோறும் 3ஆவது வெள்ளிக்கிழமை சிறு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும். இதேபோல் வருகிற 21ஆம் தேதி சிறு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. தஞ்சாவூரை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இளைஞர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெருமாறு மாவட்ட ஆட்சியார் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!