India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூா் அரண்மனை வளாகத்தில் 7வது புத்தக திருவிழாவானது ஜூலை 19 தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டு பயன்பெற்று செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா வருகிற 19ந் தேதி தொடங்கி தொடர்ந்து 29ந் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் 7வது புத்தகத் திருவிழா 11 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்வாண்டு நடைபெறும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா சிறப்பாக அமைவதற்கு அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தல் செலவின கணக்கு விபரங்களை வருகிற ஜூலை 1-ஆம் தேதி தேர்தல் செலவின மேற்பார்வையாளர் முன்னிலையில் தாக்கல் செய்ய உள்ளனர். வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்கு விபரங்கள் இறுதி செய்யப்பட்ட பின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா வருகிற 19ந் தேதி தொடங்கி தொடர்ந்து 29ந் தேதி வரை நடைபெற உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் 7வது புத்தகத் திருவிழா 11 நாட்கள் நடைபெற உள்ளது. இவ்வாண்டு நடைபெறும் தஞ்சாவூர் புத்தகத் திருவிழா சிறப்பாக அமைவதற்கு அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு என பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அரசால் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை கொண்டாடும் வகையில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள 6 – 12 ஆம் வரை உள்ள மாணாக்கர்களுக்கு கட்டுரை போட்டி, பேச்சு போட்டி வரும் ஜூலை 9ஆம் தேதி மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. போட்டியில் மாணாக்கர்கள் பங்கேற்று பரிசுகளையும் சான்றிதழையும் வெல்ல கலெக்டர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி தலைவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மாதாந்திர திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு தடுப்பது குறித்தும், டெங்கு பதித்த கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும், தாய்சேய் நலம், சிறார் நலம், மகப்பேறு மரணம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார மேம்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்து துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தஞ்சை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, துணை மேயர் அஞ்சுகம் பூபதி, உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் போதைப் பொருள்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் “எனக்கும் வேண்டாம் – எவருக்கும் வேண்டாம்” என்ற தலைப்பில் 83 பள்ளிகள், 21 கல்லூரிகள் 49 பொது இடங்களில் போதைப் பொருட்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 13 இடங்களில் பேரணியும், 15 இடங்களில் போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பேச்சுப்போட்டியும் நடைபெற்றன.
சிறந்த தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு அளித்த நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளர் ஆகியவற்றிற்கு (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரால் விருது வழங்கப்பட உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் விருது பெற http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூலை 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க தஞ்சாவூர் ஆட்சியர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் காமராஜ் மார்க்கெட் சந்தையில் கடந்த வாரங்களில் தக்காளி வரத்து குறைவால், கிலோ 80 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் பிற மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், இன்று ஒரு கிலோ தக்காளி விலை 40 ரூபாய்க்கு குறைந்தது. மேலும் சில்லரை விலையில் 45 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.