India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் வகையில் “மக்கள் நேர்காணல் முகாம்” ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை நடைபெறும். அதேபோல் வருகிற 10 ஆம் தேதி கும்பகோணம் அருகே ஆரியப்படை வீடு கிராமத்தில் ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார் மனுக்களை அளித்து உடனடி தீர்வு காணலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியர்கள், வேதியர்கள், கல்லறை பணியாளர்கள், மற்றும் தொழுநோயாளிகள் இல்லங்களில் பணியாற்றுபவர்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு நலவாரியம் அமைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. நலவாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்ப படிவங்களை பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவகத்தில் பெற்று கொள்ளுமாறு ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் சந்தேகம் வராமல் இருக்க, தற்காலிகமாக வாடகை வீடுகளில் தங்கி குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு வாடகை வீடு கொடுக்கும் வீட்டின் உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் அடையாளத்துடன் கூடிய விவரங்களையும்,என்ன காரணத்திற்காக தங்கி இருக்கிறார் என்ற விவரங்களையும் உள்ளூர் காவல் நிலையத்தில் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு, ஒரத்தநாடு, தஞ்சாவூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 01.07.2024 முதல் 15.07.2024 வரை நேரடி சேர்க்கை மூலம் பயிற்சியாளர்கள் சேர்க்கப்படவுள்ளனர். உடனடி வேலைவாய்ப்பு பெறக்கூடிய தொழிற்பிரிவுகளில் ஏராளமான காலியிடங்கள் உள்ளன. எனவே பயிற்சியாளர்கள் சேர்ந்து பயன்பெற ஆட்சியர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், மத்திய பிரதேச மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற “அஸ்மிதா கேலோ இந்தியா” மகளிருக்கான பளு தூக்கும் போட்டியில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவியர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் மாணவியர்கள் வெற்றி பெற்ற பதக்கத்தினை ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று திருவையாறில் அதிகபட்சமாக 34 மிமீ, பூதலூரில் 17.20 மிமீ, திருக்காட்டுப்பள்ளியில் 22.40 மிமீ, அய்யம்பேட்டையில் 23 மிமீ, கும்பகோணத்தில் 3 மிமீ, வெட்டிக்காடு பகுதியில் 2.60 மிமீ, பாபநாசத்தில் 4 மிமீ என மாவட்டத்தில் சராசரியாக 125.20 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
தஞ்சை கோட்ட முதல்நிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மற்றும் இந்திய அஞ்சல் துறை சார்பில் மாணவர்களுக்கு புதிய சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும் என்றும், இம்முகாமில் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஜூன் 30) மற்றும் நாளை (ஜூலை 1) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்றிரவு திடீரென்று தஞ்சாவூர், வல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பதிவான மழையளவு நிலவரம்: தஞ்சாவூர் 2.50 மி.மீ, வல்லம் 12.00 மி.மீ, குருங்குளம் 1.00 மி.மீ, பூதலூர் 2.40 மி.மீ, திருக்காட்டுப்பள்ளி 1.20 மி.மீ என சராசரியாக மாவட்டம் முழுவதும் 19.10 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சர்க்கரை நோயாளிகளுக்கான பாத சிகிச்சை தொடர்பான 9வது பயிற்சி பட்டறை நடைபெற்றது. அதன்படி டாக்டர் பாலாஜிதாதன் கூறியதாவது, தஞ்சையில் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்- மாதம் முதல் இதுவரை 1 லட்சத்து 75ஆயிரம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகவும் இவர்களில் 3,000 பேருக்கு காலில் பாதப்புண் அறிகுறிகள் உள்ளது என கூறினார்.
Sorry, no posts matched your criteria.