Thanjavur

News March 18, 2025

சோழர்களின் குலதெய்வம் தெரியுமா?

image

பிற்காலச் சோழப் பேரரசை நிறுவிய விஜயாலயன், தன் குலம் தழைக்கத் தஞ்சாவூரில் நிசும்பசூதனி எனும் தேவியை பிரதிஷ்டை செய்தார். தற்போது, நிசும்பசூதனி தேவி, தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் வடபத்ரகாளி கோயிலில் தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்பாலிக்கிறார். சுமார் 7 அடி உயரமுள்ள நிசும்பசூதனியின் திருமேனி எட்டுக் கரங்களோடு காணப்படுகிறது. ஒருமுறை இங்கு சென்று வாருங்கள்..தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்

News March 18, 2025

தஞ்சை: ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் சித்த மருத்துவக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆயுஷ் பிரிவின் கீழ் ஆயுஷ் மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நலச் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி சித்த மருத்துவம், யோகப்பிரிவில் பட்டம் பெற்றவர்கள் மார்ச்.20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை இங்கு <>க்ளிக் <<>>செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 18, 2025

சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர் கைது

image

தஞ்சாவூர், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஜபருல்லா (61) என்ற முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் தெரிவிக்க, அதிர்ச்சி அடைந்த பெற்றோர் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ஜபருல்லாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News March 17, 2025

பிளஸ் 2 போதும்: மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்

image

தமிழ்நாடு அரசு இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <>இதை கிளிக்<<>> செய்து மார்ச் 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News March 17, 2025

மகளுக்கு நிச்சயதார்த்தம் நடத்த காசு இல்லாததால் தந்தை தற்கொலை

image

தஞ்சை மாவட்டம் பாபநாசம் சிவாலய பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (55). விவசாயியான இவருக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர். தனது மகளுக்கு திருமண ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் நிச்சயதார்த்த விழா நடத்த காசு இல்லாததால் விஷம் குடித்துள்ளார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார். தற்கொலை எதற்கும் தீர்வல்ல..

News March 17, 2025

தஞ்சை: மனைவியை 30 இடங்களில் வெட்டிய கணவன்

image

கும்பகோணம், சன்னங்குளத்தைச் சேர்ந்த குமார் (40) அவரது மனைவி அனிதா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அனிதா தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். குமார் பலமுறை அழைத்தும், அனிதா வீட்டிற்கு வர மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த குமார் நேற்று அனிதாவை கை, கால், தலை என 30 இடங்களில் வெட்டியுள்ளார். காயமடைந்த அனிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, குமாரை கைது செய்தனர்.

News March 16, 2025

ராகு தோஷம் நீக்கும் திருநாகேஸ்வரம்

image

கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் பகுதியில் நாகநாத சாமி கோயில் உள்ளது. நவகிரகங்களில் ஒன்றான ராகு ஸ்தலம் இங்கு தான் உள்ளது. இங்கு நாகவல்லி, நாக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாக காட்சி அளிக்கின்றார். ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு சென்று பாலபிஷேகம் செய்தால் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.30 முதல் 6 மணி வரை ராகு பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். SHARE பண்ணுங்க

News March 16, 2025

தஞ்சாவூர்: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதுகுறித்து மேலும் அறிய <>இங்கே க்ளிக்<<>> செய்யவும். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 15, 2025

தஞ்சையில் வேலைவாய்ப்பு, ரூ.75,000 வரை சம்பளம்

image

ECHS தஞ்சாவூரில் DEO, Peon, Medical Officer ஆகிய பணிகளுக்கு 6 காலியிடங்கள் உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே (மா.15) கடைசி நாளாகும். ரூ.16,800 முதல் ரூ.75,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கான முழு விவரம் அறிய <>இங்கு க்ளிக்<<>> செய்யவும். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யவும்..

News March 15, 2025

இளைஞர் கொலை வழக்கு, 16 ஆண்டுக்கு பிறகு தண்டனை

image

தாராசுரம் பகுதியை சேர்ந்த செந்தில்நாதன், கடந்த 2009 ஆம் ஆண்டு பணம் கொடுக்கல் – வாங்கல் பிரச்சினையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா கொலை வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, விக்னேஷ், இளங்கோவன், பாண்டி ஆகிய 4 பேருக்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு ஆயுள் தண்டனை விதித்து, தலா ரூ. 3000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!