India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடில்லா குழந்தைகளாக வளர்த்திடும் “தளிர் “திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை இன்று துவக்கி வைத்து குழந்தையின் நீளத்தினை இன்பன்டோமீட்டர் கருவி கொண்டு அளவிடும் பாணியை ஆட்சியர் பார்வையிட்டார்
தஞ்சாவூர் தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன். இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த நான்கு பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து வீரமணிண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 மற்றும் 18 ஆகிய இரண்டு தேதிகளில் குடற்புழு நீக்கம் முகாம் நடைபெற உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் இந்த முகாம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என கூறியுள்ளார். மேலும் இந்த முகாமில் 5,86,000 குழந்தைகள் மற்றும் 1,98,000 பெண்களும் பயன் அடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
தஞ்சை மாவட்டத்திற்கான பொது விநியோக குறைதீர்க்கும் நாள் கூட்டம் தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மற்றும் திருவோணம் பகுதிகளில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 08) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 9/ 8 /2025 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே குறைகள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
ஆடி மாதத்தில் நாம் என்ன செய்ய வேண்டும், செய்ய கூடாது
செய்யக்கூடியவை!
✅.இறை வழிபாடு
✅.நேர்த்திக்கடன்கள்
✅.தாலி சரடு மாற்றுதல்
✅.ஆடிப்பெருக்கு வழிபாடு
✅.கூழ் படைத்தல்
✅.விவசாயம்
செய்யக்கூடாதவை!
❎திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள்
❎ வீடு மாற்றம் மற்றும் கிரகப்பிரவேசம்
❎ குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல்
❎வளைகாப்பு
❎பெண் பார்த்தல்
போன்றவற்றை செய்ய கூடாது. அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்கள்!
தஞ்சை மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <
தஞ்சையில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட குறுவட்டங்களில் நடப்பாண்டு காரீப் பருவத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு பின்வரும் விவர அடிப்படையில் பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்ய வேண்டும். வாழை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதற்கு அடுத்த மாதம் 16ஆம் தேதி கடைசி நாளாகும் என தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.