Thanjavur

News October 29, 2024

தஞ்சை மாவட்ட மக்களின் கவனத்திற்கு

image

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் எண் 06191 தாம்பரம் -திருச்சி சிறப்பு ரயில் (செங்கல்பட்டு,விழுப்புரம் சிதம்பரம்,சீ ர்காழி,கும்பகோணம், மயிலாடுதுறை,தஞ்சை) முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட ரயிலை இப்பகுதி மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும். இன்று முதல் நவ.2 வரை இயக்கப்படுகிறது. மாலை 3.30 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு திருச்சி சென்றடையும். 

News October 29, 2024

தஞ்சையில் கந்தசஷ்டி விழா 

image

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 1ம் தேதி துவங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. முருகக் கடவுள் குடிகொண்டுள்ள அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் திகழ்கிறது. இக்கோயிலில் கந்த சஷ்டி விழா வருகின்ற நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜை, அணுக்ஞை வாஸ்து சாந்தியுடன் துவங்கி 12 -11- 2024 யதாஸ்தானம் சேரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது

News October 28, 2024

கும்பகோணம் அருகே 5 பேருக்கு அரிவாள் வெட்டு

image

கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (42). இவர், நேற்று புறவழிச்சாலையில் உள்ள மதுபானக்கடையில் மதுபாட்டில் வாங்க சென்றார். அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் ராஜேஷை கிண்டல் செய்தனர். இந்நிலையில், தன்னை கிண்டல் செய்தவர்களை தட்டி கேட்க தனது தம்பியை அழைத்துள்ளார். அப்போது எதிர்தரப்பினர் 15 பேர் ஒன்று கூடி ராஜேஷ், அவரது சகோதரர் சிவசங்கரன் உட்பட 5 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

News October 28, 2024

தஞ்சையில் நிரம்பி வழியும் பொதுமக்கள்

image

தஞ்சாவூர் மற்றும் தஞ்சாவூர் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் அனைவரும் தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ள நிலையில் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட நகை மற்றும் ஜவுளி மற்றும் வெடிகளை வாங்க கடைத்தெருவுக்கு வருகின்ற. இதனால் தஞ்சாவூரில் உள்ள கடைத்தெருவுக்கு அனைத்தும் பொது மக்களால் நிரம்பி வழிகிறது .

News October 28, 2024

ஒரத்தநாட்டில் 1 டன் குட்கா பறிமுதல் 

image

தஞ்சையில் போதைப்பொருட்களுக்கு எதிராக தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரத்தநாடு காவல் ஆய்வாளர் சுதா தலைமையில் உதவி ஆய்வாளர் விஷ்ணுபிரியா மற்றும் காவலர்கள் அடங்கிய குழு அதிரடி சோதனை மேற்கொண்டதில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்கு வைத்திருந்த 1070 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டு ரஹமத்துல்லா, சுரேஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News October 27, 2024

தஞ்சை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முதலமைச்சர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற உறுப்பினர் மற்றும்உறுப்பினர் சார்ந்த நபர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தகுதியுடையவர்கள்  ஆவணங்களுடன் தனி தாசில்தார் சமூக பாதுகாப்புத்திட்டம் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

News October 27, 2024

தஞ்சை: இளநிலை உதவியாளரிடம் 5 பவுன் செயின் வழிப்பறி

image

விளார் கலைஞர் நகரை சேர்ந்தவர் குளோரி. இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை தனது டூவீலரில் சென்றுள்ளார். அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த ஒரு மர்மநபர் குளாரி அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இது குறித்த குளோரி தஞ்சை தமிழ்பல்கலைக்கழகம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்கின்றனர்.

News October 27, 2024

தீபாவளி: தஞ்சையில் இன்று ரேஷன் கடைகள் செயல்படும்

image

தமிழகம் முழுவதும் இன்று (அக்.27) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் ரேஷன் கடைகள் விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொண்டு, நியாய விலைப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News October 26, 2024

கவின் கலைக் கண்காட்சியை ஆட்சியர் பார்வை

image

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கலை பண்பாட்டுத்துறை அரசு கவின் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவியர்களின் கவின் கலைக் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

News October 26, 2024

தஞ்சை கலெக்டர் எச்சரிக்கை

image

14 வயதுக்குட்பட்ட குழந்தை தொழிலாளா்களை அனைத்து பணிகளிலும்,14 முதல் 18 வயதுடைய வளரிளம் பருவத்தினரை அபாயகரமான பணிகளில் பணியமா்த்துவது தண்டனைக்குரிய குற்றம். அவ்வாறு தொழிலாளா்கள் பணியமா்த்துவோர் மீது குழந்தை தொழிலாளா் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் . குழந்தை தொழிலாளர்கள் பற்றி புகார் அளிக்க 1098 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.