India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார். கனமழை பெய்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும், தஞ்சை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம், மதுக்கூர், புன்னைநல்லூர் உள்ளிட்ட பிற துணை மின் நிலையங்களில் நாளை (நவ.20) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனால் பாபநாசம், கபிஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்
தஞ்சாவூர் மாநகராட்சி பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நாளை (19.11.2024) மாலை நடைபெறுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சித் தலைவர் ப்ரியங்கா பங்கஜம், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்காக லாரியில் கொண்டுவரப்பட்ட ஒரு டன் குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட சிராஜுதீன், அப்துல் வஹாப், அப்துல் ரஹீம், ரசீது, ஷர்புதீன், ராஜா பக்ருதீன் ஆகிய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குட்கா மற்றும் லாரி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று 18.11.2024 விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். SHARE NOW.
தஞ்சாவூா் கீழவீதி, பழைய அரண்மனை வளாகத்திலுள்ள அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கலை பண்பாட்டுத் துறை, மாவட்ட ஜவகா் சிறுவா் மன்றம் சாா்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் நவ.23ஆம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது. விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
மருவூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வடுககுடி முனியாண்டார் கோயில் பகுதியில் அடையாளம் தெரியாத ஏழு நபர்கள் ஆச்சனூர் பகுதியில் உள்ள நகைக்கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சுற்றி திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருவையாறு வடுக்குடியை சேர்ந்த தினேஷ், ஆந்திராவை சேர்ந்த விக்கி, வீரமுத்து, மந்திரமூர்த்தி, அழகர், ராஜா, பழனிவேல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரிந்த காவலர் வினோத் என்பவர் அதே பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் காவலர் வினோத் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை பணி நீக்கம் செய்து தஞ்சை மாவட்ட எஸ்பி.ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பாபநாசம் துணை தாசில்தார் பிருந்தா, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட துணை தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலக கலைஞர் உரிமைத்தொகை திட்ட துணை இயக்குனர் சத்யராஜ் பாபநாசம் துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் நான்கு துணைத் தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாப்பாநாடு அருகே உள்ள திப்பியகுடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பட்டு (65). இன்று காலை அவருக்கு சொந்தமான வயலில் வேலை செய்வதற்காக சென்றபோது விஷ பாம்பு கடித்ததுள்ளது. இதனையடுத்து அவரை மீட்டு அவரது உறவினர்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.