India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் முன்னிலையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் வருகிற நவம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று கேட்டுக் கொண்டார்.
பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்தும் நோக்கில், தென்காசி மாவட்ட மக்களுக்கு இலவச மரக்கன்றுகள் இம்மாத இறுதிவரை வழங்கப்படுகின்றன. செம்மரம், தேக்கு, வேங்கை, சவுக்கு, நெல்லி, மகாகனி, ஈட்டி, புளி, புங்கன், நீர்மருது, வேம்பு, நாவல் போன்ற மரங்கள் வழங்கப்படுகின்றன. தொடர்புக்கு, 9629089469, 7904523216 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களிடம் ஆசை வார்த்தைகள் பேசி அவர்களிடமிருந்து ஆபாச போட்டோ அல்லது வீடியோக்களை பெறுதல் & அவற்றை காண்பித்து மிரட்டும் நபர்கள் மீது காவல்துறையினரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் பெண்களின் ஆபாச படங்கள அல்லது வீடியோக்களை பிறருக்கு வாட்ஸ் அப் & இதர இணையதளங்களில் பகிர்வதும் குற்றமாகும் என தெரிவித்துள்ளார.
தென்காசி மாவட்டத்தில் கடனா அணையில் நீர் இருப்பு 42.30 அடியும் நீர்வரத்து 2 கன அடியும், ராமநதியில் நீர் இருப்பு 60 அடியும் நீர் வரத்து 10 கன அடியும் உள்ளது. கருப்பா நதியில் நீர் இருப்பு 48.23 அடியும் நீர்வரத்து 5 கன அடியும், குண்டாறு அணையில் நீர் இருப்பு 36.10 அடியும் நீர்வரத்து 19 கன அடியும், அடவிநயினார் அணையில் நீர் இருப்பு 132 அடியும் நீர் வரத்து 5 கன அடியும் உள்ளது.
வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை மற்றும் ஷரத்தா மானு அறக்கட்டளை இணைந்து பட்டதாரி இல்லத்தரசிகளுக்கு இலவச பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு நவ.,24 முதல் தொடங்க உள்ளது. www.voiceoftenkasi.org/events என்ற இணையதளத்தில் வருகிற நவ.,10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளையின் நிறுவனர் ஆனந்தன் அய்யாசாமி இன்று தெரிவித்தார்.
சங்கரன்கோவில் வட்டார வேளாண் உதவி இயக்குநர் செல்வன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சங்கரன்கோவில் வட்டாரத்தில் நடப்பு ராபி பருவத்தில் உளுந்து, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சாகுபடி செய்துள்ள பயிருக்கு காப்பீடு செய்து மகசூல் இழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள நவ.,30ஆம் தேதிக்குள் காப்பீடு செய்துகொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
ஆலங்குளத்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது அந்தரங்க வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும், இதை பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து, சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி ரமேஸ் தலைமையிலான போலீசார் ஐந்தாங்கட்டளையைச் சேர்ந்த ஜெயராஜ்(33) மற்றும் வீடியோவை பரப்பிய ஆலங்குளத்தை சேர்ந்த சக்தி அருள் (28) ஆகியோரை கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் புத்தகத் திருவிழா தென்காசி இசி ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து வரும் 15ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்காக லோகோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெளியிட்டார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர், அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில் நகராட்சி 8-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எஸ்.டி.எஸ்.சரவணன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த இவர், தற்போது தென்காசி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா-வை சந்தித்து சால்வை அணிவித்து ஆசி பெற்றார்.
தென்காசி தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளராக தர்மசீலன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் நேற்று(நவ.,6) நியமனம் செய்யப்பட்டுள்ளார். தர்மசீலன், கடையம் அருகில் உள்ள வடமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். தகவல் தொழில்நுட்ப பிரிவு திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.