Tenkasi

News December 21, 2024

தென்காசி எஸ்.பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு

image

தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் தனி பிரிவு அலுவலகம், முகாம் அலுவலகம், விரல் ரேகை பிரிவு ஆகியவற்றில் பராமரிக்கப்பட்டு வரும் கோப்புகள் மற்றும் பதிவேடுகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் மூர்த்தி ஆய்வு செய்தார். தொடர்ந்து, காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கி அனைத்து கோப்புகளையும் சரிவர பராமரித்து வந்த காவல்துறையினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

News December 21, 2024

அரசுப் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுடன் ‘காஃபி வித் கலெக்டர்’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கலந்து கொண்டு அரசுப் பள்ளி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அரசுப் பள்ளி மாணவர்களுடனான ஆட்சியரின் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி வரவேற்பைப் பெற்றுள்ளது.

News December 21, 2024

சங்கரன்கோவிலில் முழுநேர கிளை நூலகம் திறப்பு விழா

image

சங்கரன்கோவில் கோமதி அம்மாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முழு நேர கிளை நூலகத்தினை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் ஆகியோர் நாளை (டிச.22 ஞாயிறு) திறந்து வைக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

News December 21, 2024

தென்காசியில் கல்வி கடன் வழங்கும் முகாம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியராக கூட்ட அரங்கில் கல்வி கடன் மற்றும் தொழில் முனைவோருக்கான கடன் வழங்கும் முகாம் இன்று(டிச.21) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் பங்கேற்று கடனுதவி வழங்கினர்.

News December 21, 2024

போக்சோவில் தவெக நிர்வாகி: மாவட்ட தலைவர் விளக்கம்

image

சங்கரன்கோவிலை சேர்ந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அல்-அமீன் என்பவர் இன்று(டிச.21) போக்சாவில் கைது செய்யப்பட்டார். இவர், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர் என செய்தி பரவியது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அல்அமீன் கடந்த நவ.29 அன்றே கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாக தமிழக வெற்றிக் கழக தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

News December 21, 2024

தென்காசி அருகே பயங்கரம்! தலையை துண்டாக்கி கொலை

image

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த சொக்கன் என்ற இருதயராஜ், நேற்று(டிசம்பர் 20) இரவு அச்சங்குளத்துக் கரையில் தலை துண்டித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சொத்து பிரச்னையில் இந்த சம்பவம் அரங்கேறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News December 21, 2024

பர்மா, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் கவனத்திற்கு..!

image

தென்காசி மாவட்டத்தில் வசித்து வரும் பர்மா, இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு, அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள், கடவு சீட்டுகள் & பிற ஆவணங்களையும் அவற்றில் உள்ள தொடர்பான விவரங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டு அவர்களிடம் திரும்ப ஒப்படைக்க அரசு அறிவுறுத்தியுள்ளதாக கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். பயனாளிகள் சந்தமந்தப்பட்ட RDO அலுவலகத்தை அணுகவும் அறிவுத்தல்.

News December 21, 2024

சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

image

சங்கரன்கோவில் பகுதியில் அமைந்துள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் வரும் டிச.22 காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 1 மணி வரை சர்க்கரை நோயாளிகளுக்கான கண் விழித்திரை சிகிச்சை இலவச முகாம் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு சங்கரன்கோவில் அரவிந்த் கண் மருத்துவமனையை அணுக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 21, 2024

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் பட்டியலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் பொதுமக்கள் அவசர பிரச்சனைகளுக்கு மேற்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், 04633-295455,9884042100 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பிரச்சனைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

News December 20, 2024

மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து மனு

image

தென்காசி கூட்டமைப்பு தலைவர் டிகே பாண்டியன், மாவட்ட துணை தலைவர் அன்பு ராணி, மாவட்ட பொதுச்செயலாளர் முத்தையா, கொடிக்குறிச்சி தலைவர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சோமன்னாவை சந்தித்தனர். அப்போது,  பாரதியார் பெயரில் நெல்லை, தென்காசி வழியாக புது டெல்லிக்கும், தென்காசி -சென்னைக்கு புதிதாக வந்தே பாரத் ரயில் விடவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

error: Content is protected !!