Tenkasi

News November 12, 2024

தென்காசி வரும் சுற்றுலாத்துறை அமைச்சர்

image

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நாளை(நவம்பர் 13) தென்காசி வருகை தருகிறார். கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கருணாநிதி அணை பகுதியில் சுற்றுலா பூங்கா அமைப்பது தொடர்பாக பார்வையிடுகிறார். அதனைத் தொடர்ந்து பொட்டல்புதூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறார் என நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 12, 2024

ஆழ்வார்குறிச்சி பள்ளி மாணவர்கள் அசத்தல்!

image

தனியார் தொலைக்காட்சி நடத்திய மாநில அளவிலான வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி போட்டியானது மதுரை வேளாண் கல்லூரியில் நடைபெற்றது. இதில், ஆழ்வார்குறிச்சி குட் ஷெப்பர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விக்னேஷ் மற்றும் ராகுல் ஜூனியர் பிரிவில் 2 ஆம் பரிசு வென்று அசத்தினர். இதை தொடர்ந்து, அந்த மாணவர்களை பள்ளி தாளாளர் ஆண்டனி பாபு, பள்ளி முதல்வர், தலைமை ஆசிரிய ஆசிரியைகள் உள்ளிட்டோர் நேற்று பாராட்டினர்.

News November 12, 2024

முதல்வரை சந்தித்த சங்கரன்கோவில் எம்.எல்.ஏ

image

சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரான ராஜா நேற்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் வைத்து நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் முதல்வர் விருதுநகருக்கு நேற்று முன்தினம் அரசு முறை பயணம் முடிந்த நிலையில் இன்று தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

News November 11, 2024

தென்காசி மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் சார்பில் இன்று (நவம்பர் 11) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள், தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2024

ஆலங்குளம் யூனியன் அலுவலக கட்டிடம் நாளை திறப்பு 

image

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் இன்று செய்திக் வெளியிட்டுள்ளது. அதில், “ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தினை நாளை 12ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2024

தென்காசி மாவட்ட காவல்துறையின் முக்கிய எண்கள்

image

தென்காசி மாவட்ட காவல்துறையின் முக்கிய தொலைபேசி எண்கள் பின்வருமாறு: குழந்தைகளுக்கான உதவி எண் 1930, பெண்களுக்கான உதவி எண் 181, தென்காசி மாவட்ட காவல்துறை உதவி எண் 9884042100, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04633 295455, அவசர உதவி எண் 100 – ஐ தொடர்பு கொள்ளலாம்.

News November 11, 2024

கோவில் உண்டியலை உடைத்து சென்றவர் கைது 

image

கடையநல்லூர் கள்ளம்புலி கிராமத்தில் இன்று அதிகாலை அங்குள்ள பூ மாரியம்மன் கோவில் உண்டியலை மர்மநபர் ஒருவர் உடைத்து ஆட்டோவில் தூக்கிச் சென்றார். இதையடுத்து சிசிடிவி கேமரா பதிவை வைத்து சேர்ந்தமரம் காவல்துறை உதவி ஆய்வாளர் தீபன் குமார் தலைமையிலான போலீசார், உண்டியலை திருடிச் சென்ற கரடிகுளம் பகுதியைச் சார்ந்த கருப்பையா என்பவர் மகன் சண்முகம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 11, 2024

தென்காசி மக்கள் குறைதீர் நாள் முகாம் விவரம்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 420 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார். இதில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டன. இதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கலெக்டர் ஆலோசனை செய்தார்.

News November 11, 2024

தென்காசி: வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில், நவ.,16,17 & 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 18 வயதை பூர்த்தி அடைந்த அனைத்து வாக்காளர்களும் புதிய வாக்காளர் அட்டையை பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் திருத்தம் வேண்டியிருப்பின் திருத்தம் செய்துகொள்ளலாம்.

News November 11, 2024

நம்பர் பிளேட் இல்லாமல் இயங்கும் கனிமவள வாரிகளால் அதிர்ச்சி!

image

தென்காசி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு, சட்ட விதிகளை மீறி கனரக லாரிகள் மூலம் கனிம வளம் கடத்தப்பட்டு வருகிறது. இந்த கனரக லாரிகளால் விபத்துகள் மற்றும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் நிலையில், நேற்று(நவ.,10) இரவு கீழ சுரண்டை வழியாக கனிம வளங்களை ஏற்றிச்சென்ற லாரியில் வண்டி எண் இருபுறமும் இல்லாமல் இருந்தது. விதிமுறைகளை மீறி தொடர்கதையாகி வரும் இதுபோன்ற சம்பங்களால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.