India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென்காசி மாவட்டத்தில் நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனி நபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்பை அங்கீகரித்து விருது வழங்கப்பட உள்ளது. விருதினை <
தென்காசி தெற்கு மாவட்ட பகுதியில் ஜன.29 அன்று புதிய திமுக அலுவலக கட்டடங்கள் திறப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட 10 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொள்ளவுள்ளதாகவும், இதில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ளும் படியும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் இன்று கேட்டுக் கொண்டுள்ளார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜன.29-ல் தென்காசி தெற்கு மாவட்டம் வருகை தர உள்ளார் . இது தொடர்பாக மாவட்ட மகளிர், மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சுரண்டையில் நேற்று(ஜன.22) நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன் பங்கேற்றனர்.
தென்காசி கலெக்டர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மாவட்டத்தில் 2024ம் ஆண்டில் 4204664 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கூட்டாய்வின் மூலம் ரூ.1,20,05,000/- அபராதம் விதிக்கப்பட்டு 490 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.உணவு பாதுகாப்புத்துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்து 33 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான இராம உதயசூரியன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பெரியார் குறித்த விமர்சனங்களை சீமான் நிறுத்தாவிட்டால், மதிமுக தலைமை அனுமதியோடு தென்காசி மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சீமான் கொடும்பாவி எரிக்கும் மாபெரும் போராட்டம் நடைபெறும்” என தெரிவித்தார்
“தென்காசி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை, வெளிமாநில மதுவை கடத்தி விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்தல் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் நடமாட்டம் தொடர்பாக 948754 8177, 9411494115 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்” என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.*உங்கள் சமூக ஆர்வலர் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க*
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் அய்யாசாமி. இவர் அமெரிக்காவில் மென் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தென்காசி பாஜக நிர்வாகியாக பணியாற்றி வந்த நிலையில், தற்போது அவர் தென்காசி மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்னாள் பாஜக மாநில தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தென்காசி மாவட்ட முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்க தலைவர் ரவி, செயலாளர் பண்டாரசிவன்,பொருளாளர் முருகன் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், சென்னையில் வரும் 24ஆம் தேதி முடிதிருத்தம் தொழிலாளர் நல சங்கம் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் மூடி அடைப்பு செய்து போராட்டம் நடப்பதாக தெரிவித்தனர்.
குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சைலஷ்.2003ல் போலீஸ் பணிக்கு சேர்ந்தார். இவர் பணிபுரிந்த குமரி, தென்காசி மாவட்டங்களில் அதிகாரிகள் மீது புகார் கூறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் மீது புளியங்கடி பகுதியை சேர்ந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்ட உட்கோட்ட பிரிவுகளில் (தென்காசி புளியங்குடி, சங்கரன்கோவில், ஆலங்குளம்) காவல் மற்றும் நெடுஞ்சாலை துறையின் இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100-ஐ தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.