India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மதி அங்காடி திறப்பு விழா இன்று நடந்தது. இதை தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர தலைமை வகித்து திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை செப்-21 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை , வீராசாமி செட்டியார் கல்விக்குழுமம் வளாகம் , எஸ்.வி.எஸ் நகர் , புளியங்குடியில் வைத்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் 10 , 12 , ஐ.டி , டிப்ளமோ , பி.இ முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தொடர்புக்கு : 9362863001 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
தென்காசி மக்களே, தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்காக 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. விண்ணப்பிக்க கடைசி தேதி நாளையுடன் (செப். 21) முடிவடைகிறது. கல்வி தகுதி – 10வது தேர்ச்சி. 18 வயது நிரம்பியவர்கள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,200 முதல் 67,100 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.
தென்காசி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 21க்குள் <
தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூர், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய ஆறு வட்டங்களில் 21-09-2025 அன்று காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை நடைபெற இருந்த கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப் படுகிறது. மீண்டும் எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார். SHARE IT.
பழைய குற்றால அருவி பகுதியில் சுற்றித் திரியும் கரடியால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து நேரிடும். எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இனிமேல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என தென்காசி மாவட்ட வனத்துறை சார்பில் வன அதிகாரி ராஜமோகன் தெரிவித்துள்ளா.ர்
தீயணைப்புத் துறையின் சார்பாக தென்காசி தலைமை மருத்துவமனையில் தீத் தடுப்பு மற்றும் விபத்து கால மீட்பு பயிற்சி இன்று அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் தீப்பிடித்தால் எப்படி தப்பிப்பது மற்றும் மாடியில் சிக்கியவர்கள் மீட்பது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள நோயாளிகளை மீட்பது குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <
சங்கரன்கோவில் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன காப்பகம் கட்டண கழிப்பிடம் மற்றும் வெளிப்புற ஏழு கடைகள் சிறப்பு நிபந்தனைக்கு உட்பட்டு ஏலம் விடப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளியை 1.10.2025 ஆம் தேதி புதன்கிழமை காலை 10:30 மணி வரை சமர்ப்பிக்கலாம் என சங்கரன்கோவில் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.