Tenkasi

News February 16, 2025

பைக் மீது ஆம்னி பஸ் மோதி ஒருவர் பலி

image

தென்காசி, சிவகிரி அருகே உள்ள ரெட்டியார்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம் (45). டீ கடை நடத்தி வந்தார். நேற்று இரவு பைக்கில் ரெட்டியார்பட்டி சாலையில் சென்றபோது சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் வழியாக பெங்களூர் நோக்கி சென்ற ஆம்னி பஸ் பைக் மீது மோதியதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இதனால் சிவகிரி – ராஜபாளையம் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News February 15, 2025

தென்காசி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம்

image

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் முதியவர்கள் அனைவரும் மிகவும் சிறமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் பழங்கள், கரும்பு ஜூஸ், தர்பூசணி போன்றவற்றை பருகி தங்களின் தாகத்தை தீர்த்துக் கொள்கின்றனர். மேலும் வெயிலின் தாக்கம் நாளை முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.

News February 15, 2025

அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தென்காசி வருகை

image

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய கட்டிடம் கட்டுவதற்காக ரூபாய் 5.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று தென்காசி வருகை தர உள்ளார். அவரின் வருகையை முன்னிட்டு திமுகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

News February 15, 2025

தென்காசி மாவட்டத்தில் லோகோ பைலட் பற்றாக்குறை!

image

தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவர் பாண்டியராஜன் ரயில்வே நிர்வாகத்திற்கு விடுத்துள்ள வேண்டுகோள்: மதுரை ரயில்வே கோட்டத்தில் மட்டும் தற்போது ரயில் ஓட்டுநர்கள் 50 பேர் பற்றாக்குறையாக உள்ளனர். இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களை மையமாக வைத்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே தேவையான லோகோ பைலட்கள் நியமித்து சிறப்பு ரயில்களை இயக்க வலியுறுத்ததியுள்ளார்.

News February 15, 2025

தென்காசி வரும் அமைச்சரை வரவேற்க அழைப்பு

image

தென்காசி மாவட்டத்திற்கு இன்று(பிப்.15) மாலை 5 மணியளவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் வருகை தருகிறார். அவருக்கு இலத்தூர் விலக்கு அருகில் மாவட்டக் திமுக சார்பில் வரவேற்க இருப்பதால் மாநில, மாவட்ட, ஒன்றிய நகர, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ளும்படி மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

News February 14, 2025

ஆலங்குளத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் வைத்து நாளை (பிப்.15) மற்றும் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு தேவையான ஆட்கள் எடுப்பதற்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. வேலை தேடுபவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு இன்று கேட்டுக்கொள்ளப்பட்டது. *வேலை தேடும் நண்பர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்* தொடர்புக்கு- 9994364945

News February 14, 2025

காதலன் ஏமாற்றியதால்; காதலி தற்கொலை முயற்சி

image

வீரகேரளம்புதூரை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் தன்னை காதலிப்பதாக ஏமாற்றி தன்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்துவிட்டு தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கூறி இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இளம்பெண் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News February 14, 2025

மார்ச் 31-க்குள் நிலுவைத் தொகை வழங்க முடிவு!

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவுரையின்பேரில், தென்காசி வேளாண் இணை இயக்குநர் மகாதேவன் தலைமையில் வாசுதேவநல்லூர் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வருகிற மார்ச் 31ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

News February 14, 2025

தென்காசி: வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்

image

தென்காசி வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் 16ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான முகாம் நடைபெற உள்ளது. விவசாயிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

News February 14, 2025

தென்காசி: தேர்வு இல்லாமல் அஞ்சல் துறையில் வேலை!

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் <>71 காலியிடங்கள்<<>> நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!