Tenkasi

News November 14, 2024

வாராந்திர ரயிலை மீண்டும் இயக்க எம்பி கோரிக்கை

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தென்காசி, பாவூர்சத்திரம் வழியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்பட்ட நெல்லை-தாம்பரம் ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் இந்த ரயிலை தொடர்ந்து வாராந்திர ரயிலாக இயக்க வேண்டும் என தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் ரயில்வே அமைச்சகத்திற்கு இன்று கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.

News November 14, 2024

இரும்பு சக்கரங்களை சாலையில் இயக்கினால் கடும் நடவடிக்கை

image

தென்காசி ஆட்சியர் கமல்கிஷோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய பயன்பாட்டிற்கான டிராக்டர்கள் மற்றும் இதர உழவு இயந்திரங்களை இரும்புச் சக்கரங்களுடன் தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள் & கிராமப்புற சாலைகளில் இயக்குவதன் காரணமாக சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, இரும்பு சக்கர வாகனங்களை சாலையில் இயக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News November 14, 2024

தென்காசி: புத்தக திருவிழா ஏற்பாடுகள் மும்முரம்

image

தென்காசி இசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாளை(நவ.,15) முதல் 24ஆம் தேதி வரை பொதிகை புத்தக திருவிழா நடைபெறுகிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து புத்தகம் விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் புத்தக ஸ்டால்களை அமைப்பர். இதனை தொடர்ந்து, கண்காட்சியில் அரங்குகள் அமைக்கும் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

News November 14, 2024

தென்காசி அருகே போட்டியில் தோற்றதால் மாணவி தற்கொலை!

image

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியை சேர்ந்த ரோஸ்லின்(21) சிவகாசியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். இவர் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு அதில் தோல்வி அடைந்ததால் கடந்த 11ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது மயங்கிய நிலையில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரோஸ்லின் நேற்று முன்தினம் உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 14, 2024

புத்தக திருவிழா பெருந்திரள் வாசிப்பு இயக்கம்

image

இலஞ்சி ராமசாமியா பிள்ளை மேல்நிலைப் பள்ளியில், நேற்று பொதிகை புத்தக திருவிழாவை முன்னிட்டு பெருந்திரள் வாசிப்பு இயக்கம் நடந்தது. இதில் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தென்காசி எம்எல்ஏ பழனி நாடார், மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) ஜெயபிரகாஷ் ராஜன், மாவட்ட உதவி திட்ட இயக்குனர் காதர் மீரான், நூலகர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News November 14, 2024

தென்காசி ஆட்சியரின் இன்றைய தின நிகழ்வுகள்

image

தென்காசி கலெக்டர் நேற்று (நவ.13) விடுத்துள்ள செய்திக்குறிப்பில்; தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு குழந்தைகள் விழிப்புணர்வு குறித்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் துவக்கி வைக்க உள்ளார். தொடர்ந்து, இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.

News November 14, 2024

தென்காசி: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

தென்காசி மாவட்டத்தில் காவல் மற்றும் நெடுஞ்சாலை துறை ரோந்து பணியில் இன்று (நவ.13) இரவு 10 மணி முதல் நவ.14 காலை 6 மணி வரை பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விபரம் மாநகர காவல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9884042100 – ஐ தொடர்பு கொள்ளவும்.

News November 13, 2024

தென்காசியில் புதிய கட்சி ஆரம்பிக்க முற்பட்டவர் கைது

image

தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே பொதிகை அறக்கட்டளையை நடத்தி வந்த கிருஷ்ணன் என்ற இளைஞர் இன்று (நவ.13) தனது பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி புதிய கட்சியின் பெயரை அறிவிக்க முற்பட்டபோது அங்கு வந்த போலீசார் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டதாக கூறி அவரை அதிரடியாக கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது

News November 13, 2024

தென்காசி மாவட்ட அணைகளின் நிலவரம்

image

தென்காசி மாவட்டத்தில் 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனா அணையின் நீர்மட்டம் 41.40 அடியாகவும், 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணையின் நீர்மட்டம் 59.50 அடியாகவும், 72 அடி முழு கொள்ளளவு கொண்ட கருப்பா நதியின் நீர்மட்டம் 48.23 அடியாகவும், வடகரையில் உள்ள 132 அடி முழு கொள்ளளவு கொண்ட அடவி நயினார் அணையில் 61.25 அடி நீர்மட்டம் இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 13, 2024

தென்காசி அருகே 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி!

image

தென்காசியிலிருந்து அளவுக்கு அதிகமாக வைக்கோல் லோடு ஏற்றிய லாரி ஒன்று, கேரளாவிற்கு நேற்று(நவ.,12) சென்று கொண்டிருந்தது. தென்மலை அருகே உள்ள கழுதுறுட்டி ஆனைச்சாடி பாலத்தின் எல்லையில், எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட ஒதுங்கியபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துத்தில் சிக்கியது. டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.