India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட அமைப்பு செயலாளர் கட்டி அப்துல் காதர், முஸ்லீம் லீக் தலைமை கழக பேச்சாளர் முகமது அலி ஆகியோர் இன்று சென்னையில் உள்ள முஸ்லிம் லீக் மாநில தலைமையகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் முகைதீனை நேரில் சந்தித்து ராமநாதபுரம் வெற்றி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் – 4,25,679 வாக்குகள்
*புதிய தமிழகம் வேட்பாளர் கிருஷ்ணசாமி – 2,29,480 வாக்குகள்
*தமமுக வேட்பாளர் ஜான் பாண்டியன்- 2,08,825 வாக்குகள்
*நாதக வேட்பாளர் இசைமதிவாணன்- 1,30,335 வாக்குகள்

தென்காசி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நேற்று யூஎஸ்பி கல்லூரியில் நடந்தது.இந்நிலையில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிந்து நேற்று மாலையில் அறிவிக்கப்பட்டது அதில் பதிவான மொத்த வாக்குகள் 9132 தபால் வாக்குகள் செல்லாதவை1320 திமுக வேட்பாளர் 2654, அதிமுக வேட்பாளர் 1190, பாஜக வேட்பாளர் 1843 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 1585 வாக்குகளை பெற்றனர்

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட ஜான் பாண்டியன் இன்று 7 மணி நிலவரப்படி இரண்டு லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் 420823, அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 227328, பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 205569, நாதக வேட்பாளர் இசை மதிவாணன் 128049 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தென்காசி பாராளுமன்ற தொகுதி 19 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 387758, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 207829, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 185466, இசை.மதிவாணன் (நா.த.க) – 116458 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 179929 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராணி ஸ்ரீகுமார் – அமோக வெற்றி பெற்றுள்ளார்.அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டாவது இடத்தையும், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் போட்டியிட்ட ஜான்பாண்டியன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றுள்ள டாக்டர் ராணி ஸ்ரீகுமாருக்கு திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டு லட்சம் வாக்குகளை தாண்டி பெற்றுள்ளார். இன்று மாலை 5.40 நிலவரப்படி திமுக வேட்பாளர் 394043, அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 212589, பாஜக வேட்பாளர் 188547, நாதக வேட்பாளர் 118866 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளனர்.

புதிய தமிழக கட்சி தலைவர் கிருஷ்ணசாமி 1998 ,1999, 2004, 2009, 2014 ,2019 ஆகிய 6 முறை தென்காசி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டார். இதைத்தொடர்ந்து இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2024 மக்களவை தேர்தலில் தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இந்நிலையில் தற்போது 7ஆவது முறையான இத்தேர்தலிலும் அவர் தோல்வி அடைந்தார்.

தென்காசி பாராளுமன்ற தொகுதி 18 ஆவது சுற்றில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி ராணி ஸ்ரீகுமார் (திமுக) – 370882, டாக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக) – 197506, ஜான்பாண்டியன் (பா.ஜ.க) – 175488, இசை.மதிவாணன் (நா.த.க) – 109993 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் 173376 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

தென்காசி மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று முடிவு பெறும் நிலையில் மாலை 5.20 மணி நிலவரப்படி திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் 378795, அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி 203271, பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் 179158, நாதக வேட்பாளர் இசை மதிவாணன் 113994 வாக்குகளை பெற்றுள்ளனர். இதில் நாதக வேட்பாளர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார்.
Sorry, no posts matched your criteria.