India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டியுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தென்காசி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தென்காசியில் இருந்து குற்றாலத்திற்கும் குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம், ஐந்தருவி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு போக்குவரத்து அதிகாரிகள் இன்று கேட்டுக்கொண்டனர்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும் வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் 34 பேரை இடமாற்றம் செய்து மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) அமிர்தலிங்கம் நேற்று உத்தரவிட்டார். இந்த பணி மாறுதல் தொடர்பாக எந்தவித மேல்முறையீடுகளும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் வருவாய் ஆய்வாளர்கள் பதவியேற்ற உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்ட அறிக்கையில் மாவட்டத்தில் வீர தீர செயல் விழுந்த பெண்களுக்கு சுதந்திர விழாவின் போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கல்பனா சாவ்லா விருது வழங்க உள்ளார். தகுதி உள்ள நபர்கள் https://award.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூலை 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். விருது பெறுபவர்களுக்கு தங்க மூலாம் பூசப்பட்ட வெள்ளி பதக்கம் ரூ 5 லட்சம் வழங்கப்படும்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நாளை வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகிறார். இதில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பேச்சாளர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு தகவலின்படி, உங்களது அலைபேசிகளில் தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், அப்படி பதிவிறக்கம் செய்யப்படுவதால் உங்களது வங்கி கணக்கில் பணம் கிடைக்கும் என்ற செய்தியை நம்ப வேண்டாம் என்றும், அதன் மூலம் உங்களது செல்போன் ஹேக் செய்ய வாய்ப்புள்ளது என்றும் தென்காசி மாவட்ட காவல்துறை தகவல் வழங்கியுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று வெளியிட்ட அறிக்கையில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணி புரிந்தவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தகுதியான மாற்றுத்திறனாளிகள் ஜூலை 2ம் தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் நேரிலோ அல்லது தபாலில் விண்ணப்பிக்கலாம் கேட்டுக்கொண்டார்.

தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், குற்றால அருவியில் குளிக்க 3 நாள்கள் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று தான் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

2024ஆம் ஆண்டிற்கான அக்னிவீர் வாயு திட்டத்தின் கீழ், இந்திய விமானப் படையில் ஆள்சேர்ப்பு பணி நடைபெற உள்ளது. இதற்கு வரும் அக்டோபர் 18ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறுகிறது. இதில், விருப்பமும் தகுதியும் உள்ள இளைஞர்கள், https://agnipathvayu.cadc.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். திருமணமாகாத ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.

தென்காசி மாவட்டம் மாவட்ட வேலை வாய்ப்பு (ம) தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் பொதுத்தேர்வுக்கு கட்டணம் இல்லா பயிற்சி வகுப்பு வருகிற ஜூலை. 1ம் தேதி குத்துக்கல்வலசையில் உள்ள அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு இன்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டார்.

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பு கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு https://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என்றார்.
Sorry, no posts matched your criteria.