India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மக்களே, தமிழக ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர், இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள்; 8, 10th படித்தவர்கள், 18 வயதை கடந்தவர்கள் இந்த <
தென்காசி மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
தென்காசி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<
தென்காசி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 25க்கு மேற்பட்ட அலுவலகர் பணிக்கு காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 19 – 28 வயதுகுட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <
சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ். இவர் நேற்று (செப் 22) யானைப்பாலம் அருகே உள்ள கோயில் மடத்தில் படுத்திருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள் அவரது கண்களில் மிளகாய் பொடி துாவி, மது பாட்டிலால் கழுத்து மற்றும் கைகளில் சரமாரியாக குத்தி தாக்கினர். காயமடைந்த ரமேஷை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25.09.2025 காலை 11:00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் .கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று(செப்.22) இரவு தென்காசி, புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்தில் உள்ள நாரணாபுரம் துணைமின் நிலையத்தில் நாளை (23.9.2025) செவ்வாய்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் பின்வரும் இடங்களில் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் இருக்காது. தரணிநகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்செவல் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தென்காசி மக்களே இனி ரேஷன் கடைகளில் நியாய விலை பொருட்கள் வாங்க கட்டபையும் காசூம் கொண்டு போகும் காலம் போயே போச்சு.தமிழக அரசு புதிதாக ”மொபைல் முத்தம்மா ” சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் உங்க ரேஷன் கடைகளில் UPI- ஐ மூலம் பணம் செலுத்தி நியாய விலை பொருட்களை வாங்கலாம். நீங்க ரேஷன் கடைக்கும் கட்டை பையும் போனும் கொண்டு போற காலம் வந்தாச்சு. உங்க குடும்ப உறுப்பினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில் பல பேர் பேருந்து நிலையங்களில் ஏராளமான மதுப் பிரியர்கள் மது அருந்திவிட்டு பேருந்து நிழற்குடையில் மது போதையில் படுத்து கிடப்பதால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.