India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நிதியமைச்சர் சட்ட பேரவையில் தாக்கல் செய்து வருகிறார். அதில், தென்காசி மாவட்டம் கரிவலம் வந்தநல்லூரில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்காக நிதி ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சிகள் மூலம் பொது மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். *தென்காசி மாவட்டத்தின் புதிய வருகையை மக்களுக்கு ஷேர் செய்து தெரியபடுத்தவும்*
தென்காசி அணைக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மணிபாரதி(27) என்ஜினியரிங் பட்டதாரியான இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது பெற்றோர்கள் திருமண வயதாகிறது வேலை ஏதாவது பார்த்தால் தான் பெண் பார்க்க முடியும் என கூறியதாகவும் தெரியவந்துள்ளது. நேற்று மதியம் தனது வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு மணிபாரதி சென்று கதவை பூட்டி கொண்ட நிலையில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையில் பகுதிநேர யோகா பயிற்சிவிப்பாளர் பதவிக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்ப படிவங்களை https://tenkasi.nic.in/notice_category/recruitment வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் மார்ச்.28 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. *ஷேர் பண்ணுங்க
தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் இயன் முறை மருத்துவர் ஒலியியல் நிபுணர் & பேச்சு சிகிச்சை நிபுணர் உளவியலாளர் மற்றும் ஆய்வக நுட்புநர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியுள்ளோர் விண்ணப்ப படிவங்களை <
சங்கரன்கோவில் அருகே உள்ள வன்னிக்கோனேந்தலில் பைக் மீது கார் மோதிய விபத்தில் பைக்கில் பயணித்த சிவகிரி வட்டாட்சியர் மைதீன் பட்டாணி, அவரது மகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தென்காசியிலிருந்து 6 கி.மீ தொலைவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இலத்தூர் மதுநாதீசுவரர் கோயில் உள்ளது. இங்கு தெற்கு நோக்கி கைகளை அபயஹஸ்த நிலையில் வைத்து எழுந்தருளி இருப்பதால், சனி சம்பந்தப்பட்ட எந்த வித தோஷமும் இங்கு வந்து வணங்கினால் விலகிப்போகும். நீர்க்கிரகமான சனியை இலத்தூரில் வந்து வழிபட்டால் சர்க்கரை வியாதி பறந்தே போய்விடும் என்பது இங்குவரும் பக்தர்களின் நம்பிக்கை. *ஷேர் பண்ணுங்க*
தென்காசி, ஆலங்குளத்தில் புதிய நான்கு வழி சாலை பணி நடைபெற்று வருகின்ற நிலையில் HP பல்க் அருகே நெடுஞ்சாலைத்துறையினர் கழிவுநீர் வாய்க்கால் பணிகள் நடைபெற்ற இடத்தில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் விபத்து ஏற்படுத்தும் விதமாக இருந்ததாக பொதுமக்கள் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.இது குறித்து நேற்று WAY2NEWS-இல் செய்தி வெளியானது. செய்தியை தொடர்ந்து இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சுரண்டை தொழிலதிபரும், வியாபாரிகள் சங்க பேரவை மாநில அமைப்பு செயலாளருமான எஸ்வி கணேசன் பேரன் எஸ்.அபி சிவராஜ் மாவட்ட மாநில நீச்சல் போட்டிகளிலும் வெற்றியடைந்து பல விருதுகளை பெற்றுள்ளார். அவரை நேற்று(மார்ச் 12ம் தேதி) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அழைத்து பாராட்டினார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் சிவராஜ்-க்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் ‘தீய சக்தியை வேரறுப்போம்’ என்ற தலைப்பில் பாஜக சார்பில் நேற்று(மார்ச் 12) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் மகளிர்க்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றார்.
தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.