India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ என்ற நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் தென்காசி எஸ்பி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார். அப்போது, தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் இயங்கும் என்று கண்டுபிடித்திருந்த மாணவனின் திறமையை பாராட்டினார். உடன் கல்லூரி நிர்வாகி புதிய பாஸ்கர் இருந்தார்.

தென்காசி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு இலவச சட்ட உதவி மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நாளை கோல்டன் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை வகிக்கிறார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

புளியங்குடி சிந்தாமணியில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் புரட்டாசி மாத திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவிழாவை முன்னிட்டு நாளை (அக்-17) 11ம் நாள் நிகழ்ச்சியாக மதுரை முத்து வருகை தருகிறார். தொடர்ந்து, நாளை மாலை 6 மணிக்கு மதுரை முத்து குழுவினரின் மாபெரும் யாழ் இன்னிசை மட்டும் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

தென்காசியில் கோவில்பட்டி அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடத்தின் ராபிய பருவத்திற்கான பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் மத்திய, மாநில அரசுகளால் தற்போது அறிவிக்கப்பட்டது. பயிர் காப்பீடு வசதி தற்போது அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரீமியம் தொகை மட்டுமே செலுத்த வேண்டும், கூடுதல் கட்டணம் கிடையாது என்றார்.

ஆலங்குளம் அருகே கண்டபட்டியை சேர்ந்தவர் லாரன்ஸ்(24) எலக்ட்ரீசியன். தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒப்பந்த பணியாளராக பணி செய்து வந்த இவர், நேற்று(அக்.,15) முக்குடை அடுத்த தென்திருபுவனம் அருகில் தாமிரபரணி ஆற்றில் உள்ள உரை கிணற்றில் பராமரிப்பு பணி மேற்கொண்டபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தண்ணீரில் மூழ்கி பலியானார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வாய்ஸ் ஆப் தென்காசி அமைப்பு சார்பில் டிஜிட் ஆல் தென்காசி துவக்க விழா வருகிற 20ஆம் தேதி குற்றாலம் சாலை அருணா மஹாலில் வைத்து நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரபல மென்பொருள் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, டிஜிட்டல் பாலிடிக்ஸ் தேசிய செயலாளர் தேடல் ஆனந்தன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வாய்ஸ் ஆப் தென்காசி நிறுவனர் ஆனந்தன் ஐயா சாமி நேற்று கேட்டுக்கொண்டார்.

தமிழக அரசு வருகிற வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பேரிடர் காலங்கள் மற்றும் பேரிடர் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க இன்று (அக்.15) எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த எண்களை தொடர்பு கொண்டு மழைக் காலங்களில் பொதுமக்கள் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு முடுக்கியுள்ளது. இதற்காக தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்காசி மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் தயார் நிலையில் உள்ளனர். அதனால் பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை. மேலும் உதவி தேவைப்பட்டால் அவரச எண் 101-க்கு அழைக்கலாம். SHARE IT.

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில்சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 18-ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குத்துக்கல்வலசை அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதனை வேலை வாய்ப்பு தேடுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் தென்காசி பாரதிய ஜனதா கட்சி உடைய மாவட்ட தலைமை அலுவலகத்தில் நேற்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியின் உடைய முன்னாள் முதல்வர் முனைவர். ராஜேஸ்வரி கிருஷ்ணகுமார் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக, தென்காசி மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வில் ஏராளமான பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.