Tenkasi

News October 18, 2024

அமைச்சரை சந்தித்த சிவகாசி தேர்தல் பொறுப்பாளர்

image

தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த திமுக மாநில மருத்துவரணி துணை செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான சிவகாசி சட்டமன்றத்தொகுதி பார்வையாளராக திமுக சார்பாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று(அக்.,17) தமிழக நிதித்துறை மற்றும் காலநிலை சுற்றுச்சூழல் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களை அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News October 17, 2024

தென்காசியில் இரவு ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள்

image

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம்(அக்.,17) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் விபரங்களை வெளியிட்டுள்ளது.‌ அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது அவசர உதவி எண் 100 அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 17, 2024

தென்காசியில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு

image

தென்காசி ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2024-25 ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் மதிப்பீட்டு குழு தலைவர் உள்ளிட்ட குழுவினர் தென்காசி மாவட்டத்தில் 24.10.2024 அன்று கால ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், பொதுமக்கள் குறைகள் குறித்து மனுக்கள் வழங்கவும் ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News October 17, 2024

‘மதுக்கூடம் நிறுத்தம்’..தென்காசி மக்கள் அதிர்ச்சி!

image

தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரம், சுரண்டை மார்க்கத்தில் மினி பேருந்துகள் தனியார் மூலமாக இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த வழியாக செல்லும் தனியார் மினி பேருந்தில் புதிதாக அறிவிப்பு ஒன்றை பேருந்தில் முன் பகுதியில் ஒட்டியுள்ளனர். அதில் ‘மதுக்கூடம் நிறுத்தம்’ என டாஸ்மாக் கடை ஸ்டாப் உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

News October 17, 2024

சாதனை மாணவிகளை வாழ்த்திய சிவ பத்மநாதன்

image

தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரத்தை சேர்ந்த, யோகா ஸ்கேட்டிங் மூலம் பல்வேறு பதக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திய சகோதரிகள் மிஸ்பா நூருல், ஹபீபா ஷாஜிதா ஆகியோருக்கு கடந்த வாரம் சென்னையில் அமைச்சர் முத்துசாமி சாதனையாளர் விருது வழங்கினார். தொடர்ந்து இன்று(அக்.,17) தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் சிவ பத்மநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News October 17, 2024

கோரிக்கை நிறைவேற்றினால் போராட்டம் வாபஸ்!

image

தென்காசி மாவட்டத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தடுத்து நிறுத்த வலியுறுத்தி அக்.,23ஆம் தேதி புளியரை சோதனை சாவடியில் முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளதாக, இயற்கை வள பாதுகாப்பு சங்கம் அறிவிப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், இது தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை முடிந்தது. கோரிக்கைகளை நிறைவேற்றினால் போராட்டம் வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

News October 17, 2024

கலைஞர் அறிவாலயம் அமைக்க குழு நியமனம்-ராஜா எம்எல்ஏ

image

தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சிவகிரி கலைஞர் அறிவாலயம் கட்டிட குழுவின் தலைவர், தீர்மான குழு உறுப்பினர் சரவணன், நிதி குழு உறுப்பினர்கள் சீனிவாசன், டாக்டர். செண்பக விநாயகம் (மாநில மருத்துவ அணி துணை செயலாளர்), பொன்முத்தையா பாண்டியன் (வாசு ஒன்றிய பெருந்தலைவர்) உள்ளிட்ட 15 பேரை நியமனம் செய்து” அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News October 17, 2024

திமுக நிர்வாகிகள் நியமனத்திற்கு நேர்காணல்

image

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் நேற்று அறிக்கை விடுத்துள்ளார். அதில், “தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் நியமனத்திற்கான நேர்காணல் தென்காசி மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் நாளை மறுதினம் நடைபெற உள்ளது” என தெரிவித்துள்ளார்.

News October 17, 2024

விதைகள் இலவசமாக பெறுவதற்கு அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தென்காசி மாவட்டத்தில் நீர் பாசன வசதி உள்ள விவசாயிகளின் நிலங்களில் சாகுபடி செய்ய வன சோழ விதைகள் மற்றும் வேலி மசால் விதைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதற்கு சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவர் அல்லது கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

News October 16, 2024

தென்காசி மாணவனை பாராட்டிய எஸ்பி

image

தென்காசி அருள்மிகு செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ‘வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’ என்ற நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் தென்காசி எஸ்பி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை பார்வையிட்டார். அப்போது, தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் இயங்கும் என்று கண்டுபிடித்திருந்த மாணவனின் திறமையை பாராட்டினார். உடன் கல்லூரி நிர்வாகி புதிய பாஸ்கர் இருந்தார்.

error: Content is protected !!