India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆலங்குளம் tpvமல்டிபிளக்ஸ் திரையரங்கில் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த சாமானியன் திரைப்படம், 75 வது நாளாக வெற்றிகரமாக ஓடுவதை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு இன்று அவரது ரசிகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திரைப்பட இயக்குனர் ராகேஷ், மன்ற தலைவர் எம் எஸ் சுப்பையா மற்றும் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இந்நிலையில், இன்று இரவு 7 மணி வரை தென்காசி, திருநெல்வேலி, குமரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் இன்றைய(29ம் தேதி) விலை நிலவரம்(ஒரு கிலோ), கத்தரிக்காய் ரூ.60, தக்காளி ரூ.90, வெண்டைக்காய் ரூ.60, புடலைங்காய் ரூ.30, பீர்க்கங்காய் ரூ.70, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.12, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.18, அவரைக்காய் ரூ.140, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.100, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.50க்கும் விற்பனை.

தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த காங்., தலைவர் செல்வப் பெருந்தகை இருசக்கர வாகனப் பேரணி நடத்தினார். இதில் அவர் தலைக்கவசம் அணியாமல் வந்தது குறித்து, ‘தலைவக்கவசம் உயிர் கவசம்’ என்ற வாசகம்சாமானியர்களுக்கு மட்டுமல்ல காங்., தலைவருக்கும் பொருந்தும் என பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு நிர்வாகிகளுடன் நேரில் சென்ற பாஜக நிர்வாகி மருது பாண்டியன் புகாரளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்க்கு இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, குமரி, விருதுநகர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மிதமான மழையும், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 7 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான செங்கோட்டை அருகே உள்ள குண்டார் அணை உள்ளது. தற்போது அணை அதன் முழு கொள்ளவை எட்டியுள்ள நிலையில் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதால் ஆபத்தான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆகையால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் யாரும் அந்தப் பகுதியில் சென்று குளிக்க வேண்டாம் என போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி உழவர்சந்தையில் காய்கறிகளின் இன்றைய (ஜூல.28) விலை நிலவரம். கத்தரிக்காய் ரூ.60, தக்காளி ரூ.80, வெண்டைக்காய் ரூ.60, புடலைங்காய் ரூ.25,பீர்க்கங்காய் ரூ.70,பாகக்காய் ரூ.80,சுரைக்காய் ரூ.12,தடியங்காய் ரூ.25,பூசணிக்காய் ரூ.18,அவரைக்காய் ரூ.140,மிளகாய் ரூ.70,முள்ளங்கி ரூ.50,முருங்கைக்காய் ரூ.100,சின்ன வெங்காயம் ரூ.40,பெரிய வெங்காயம் ரூ.50,இஞ்சி ரூ.160,மாங்காய் ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் வானம் மேக மூட்டத்துடனும் இரவு நேரத்தில் ஆங்காங்கே சாரல் மழையும் பெய்தது. கடையம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ராமநதி அணைப்பகுதியில் 3 மிமீ மழையும், கடனாநதி அணை பகுதியில் 1 மிமீ மழையும் பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மேற்கு எல்லையில் செண்பகவல்லி அணை அமைந்துள்ளது. இதனால் தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 10,924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 1967 இல் ஏற்பட்ட வெள்ளத்தில் 30 மீட்டருக்கு அனையில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய கேரள அரசுடன் தமிழக அரசு பேசி வந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சரிசெய்யப்படாததால் இத்திட்டம் கைவிடப்பட்டு விட்டதோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் பாதையில் மின்சார ரயில் சோதனை ஓட்டங்கள் இரண்டு முறை வெற்றி அடைந்ததை தொடர்ந்து இன்று (ஜூலை.28) முதல் கொல்லம் எக்ஸ்பிரஸ், பாலருவி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், நெல்லை – செங்கோட்டை முன் பதிவு இல்லா ரயில் ஆகியவை மின்சார ரயில்களாக இயக்கப்படுகிறது என ரயில்வே இன்று அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.