Tenkasi

News July 24, 2024

அருங்காட்சியக பொருட்கள் – ஆட்சியர் அழைப்பு

image

விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தில் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் வகையில் சென்னையில் அமைய உள்ள சிறப்பு அருங்காட்சியகத்திற்கு பொதுமக்கள் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் வழித்தோன்றல்கள் உங்களிடம் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை நன்கொடையாக வழங்கலாம். விவரங்களுக்கு 8838771603 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (ஜூலை 24) தெரிவித்துள்ளார்.    

News July 24, 2024

சாரல் திருவிழா – ஆட்சியர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சாரல் திருவிழா குற்றாலத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சாரல் திருவிழாவை செம்மையாக நடத்திட வணிக நிறுவனங்கள், தொழிலதிபர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் பொது நலன் கருதி நன்கொடை வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (ஜூலை 24) தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 9442227412 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 24, 2024

அணைகளுக்கு நீர்வரத்து சரிவு

image

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை குறைந்ததால் செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணைக்கு நீர்வரத்து 23 கன அடியாகவும், குண்டார் அணைக்கு 35 கன அடியாகவும் ,கருப்பாநதி அணைக்கு 26 கன அடியாகவும், ராமநதி அணைக்கு 21 கன அடியாகவும் , கடனா அணைக்கு 33 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News July 24, 2024

மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில், காற்றின் வேக மாறுபாடு காரணமாக மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஓரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணி வரை தென்காசி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதால வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 24, 2024

மாற்றுத்திறனாளிகள் கடன் பெற அழைப்பு

image

தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீட்டு கடன் முகாம் நாளை (ஜூலை.25) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை நகலுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

கர்ப்பிணிகளுக்கு சிறப்பு முகாம் – ஆட்சியர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஜூலை 22ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கர்ப்பணிப் பெண்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். முகாமில் கணினி மூலம் இணையதளத்தில் பதிவு செய்வதற்கும் அதில் உள்ள எளிமையான வழிமுறைகளை கற்றுக் கொடுத்து பதிவு செய்வது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 23, 2024

தென்காசியில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 26ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற உள்ளது. விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கிறார்கள். எனவே, அனைத்து வட்டார விவசாயிகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

News July 23, 2024

நல்லூரில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வருகிற ஜூலை 25ஆம் தேதி நல்லூர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து சிவலார்குளம், நல்லூர், மாறாந்தை, மாயமான் குறிச்சி ஆகிய நான்கு ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுவாக எழுதி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ளார்.

News July 23, 2024

மத்திய பட்ஜெட்டில் தென்காசியின் எதிர்பார்ப்பு (1/3)

image

பலத்த எதிர்பார்ப்புகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தென்காசி மாவட்டத்தில் வாசுதேவன் பகுதியில் அதிகளவில் கரும்பு, சுரண்டை, கடயநல்லூர், செங்கோட்டை பகுதிகளில் நெல் விளைவதால் அங்கு கொள்முதல் நிலையம் அமைக்கவேண்டும். அதனை சேமித்து வைக்க சேமிப்பு கிட்டங்கி அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என தென்காசி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

News July 23, 2024

மத்திய பட்ஜெட்டில் தென்காசியின் எதிர்பார்ப்பு (2/3)

image

திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும், இயற்கை வளங்கள் நிறைந்த தென்காசி மாவட்டத்தில் கனிமவள கொள்ளையை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும். அரசு மருத்துவமனை, சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். பொதிகை மலையில் விளையும் அரியவகை மூலிகைக்காக அப்பகுதியில் ஆயுர் வேத மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்க அறிவிப்பு வெளியாகுமா என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!