Tenkasi

News July 25, 2024

பயிர் காப்பீடு – ஆட்சியர் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் கார் பருவம், சிறப்பு பருவம், ரபி பருவம் ஆகியவற்றில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் 2024-25 ம் ஆண்டு செயல்படுத்தப்படுகிறது. நடப்பு கார் பருவத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் நெல், உளுந்து, நிலக்கடலை, வாழை, வெங்காயம், மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெற மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (ஜூலை 25) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

News July 25, 2024

தென்காசி மாவட்டத்திற்கு விடுமுறை – மனு

image

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோமதி அம்மன் திருக்கோவில் திருக்குடமுழுக்கு வருகிற ஆகஸ்ட் 28 ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் விடுமுறை வழங்கிட வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா இன்று (ஜூலை 25) கோரிக்கை மனு அளித்தார்.

News July 25, 2024

லாரி – கார் நேருக்கு நேர் மோதி விபத்து

image

கடையநல்லூர் அருகே இன்று(ஜூலை 25) லாரி – கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டிரைவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஆலங்குளத்தை சேர்ந்த பாலமுருகன்(45) என்பவர் இன்று அதிகாலை மதுரையில் இருந்து தென்காசி நோக்கி லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்த பிரபு(32) என்பவர் குற்றாலம் வந்து பின்னர் ஊர் திரும்பும்போது எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

News July 25, 2024

சூழல் சுற்றுலா மையமாகும் பழைய குற்றாலம்

image

பழைய குற்றாலத்தை சூழல் சுற்றுலா மையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு, இதற்கான பணிகளை வனத்துறை முடுக்கிவிட்டுள்ளது. கிராம அளவில் வளர்ச்சிக் குழு அமைத்து அருவி பகுதியை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றால வெள்ளத்தில் சிக்கி சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, காப்புக்காட்டுக்குள் பழைய குற்றாலம் உள்ளதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News July 25, 2024

தென்காசி உழவர் சந்தை விலை நிலவரம்

image

தென்காசி மாவட்டம் தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் இன்றைய(ஜூலை 25) விலை நிலவரம்: கத்தரிக்காய் ரூ.60, தக்காளி ரூ.70, வெண்டைக்காய் ரூ.50, புடலைங்காய் ரூ.25, பீர்க்கங்காய் ரூ.40, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.12, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.18, அவரைக்காய் ரூ.120, மிளகாய் ரூ.70, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.100, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.50க்கு விற்பனை.

News July 25, 2024

தென்காசி அருகே விபத்தில் ஒருவர் பலி

image

தென்காசி மாவட்டம் புளியங்குடி, புன்னையாபுரம் அருகே நேற்று(24ம் தேதி) மாலை நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்து வேன் மீது மோதிய விபத்தில் குற்றாலத்தில் குளித்துவிட்டு விருதுநகர் சென்ற வேனில் இருந்த 20க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்த நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News July 25, 2024

ஆலங்குளத்தில் மாநில அளவில் சதுரங்க போட்டி

image

தமிழக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் 91வது பிறந்த நாளை ஒட்டி ஆலங்குளம் ஆலடி அருணா லிபரல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி வரும் 28 ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. நடைபெறவிருக்கும் 3ஆவது மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவ மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 95009 12898 எண்ணில் தொடர்பு கொள்ளவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 25, 2024

SEED திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று (ஜூலை 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு (Scheme For Economic Empowerment of DNTs )திட்டம் மைய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் தகுதியுள்ள பயனாளிகள் மைய அரசின் இணையதளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 24, 2024

தென்காசி: இரவு மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு லேசான மழையும் பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 24, 2024

அருங்காட்சியக பொருட்கள் – ஆட்சியர் அழைப்பு

image

விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தில் தியாகத்தையும், பங்களிப்பையும் போற்றும் வகையில் சென்னையில் அமைய உள்ள சிறப்பு அருங்காட்சியகத்திற்கு பொதுமக்கள் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் மற்றும் வழித்தோன்றல்கள் உங்களிடம் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை நன்கொடையாக வழங்கலாம். விவரங்களுக்கு 8838771603 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இன்று (ஜூலை 24) தெரிவித்துள்ளார்.    

error: Content is protected !!