India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கனிம வளங்கள் நிறைந்த தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிகளவில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. கனிமவளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்றால் மாநில அரசு வரி விதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தென்காசியில் இருந்து கொண்டு செல்லும் கனிமவளங்களுக்கு தமிழக அரசு அதிகளவு வரி விதிக்க வேண்டும் எனவும், இதனால் கனிம வள கடத்தலை தடுக்கலாம் என கோரிக்கை எழுந்துள்ளது.

பிரபல ஐடி நிறுவனமான ஜோஹோவில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்கள் தென்காசி மாவட்டம் மத்தளம்பாறையில் உள்ள ஜோஹோ நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த பணிக்கான தகுதி ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். https://shorturl.at/GUvZs என்ற இணையத்தில் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 3ல் இண்டர்வியூ நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 26) மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மற்றும் திருநெல்வேலி புறநகர் என அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 3 மாவட்டங்களில் கட்சி சார்ந்து மறுசீரமைக்கப்படுகிறது. மறுசீரமைக்கப்படுகின்றன. இதில் தென்காசி வடக்கு மா.செயலாளராக ராமசந்திரமூர்த்தி, தென்காசி தெற்கு மா.செயலாளராக அருணகிரிசாமி, திருநெல்வேலி புறநகர் மா.செயலாளராக ஆசிர் நியமிக்கப்பட்டதாக டிடிவி தினகரன் நேற்று அறிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் முடிவுகள் பற்றி சென்னையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப பிரிவை மேலும் வலுப்படுத்த தேவையான கருத்துகளை எடப்பாடி வழங்கினார்.

தென்காசி மாவட்டம் ஆட்சியரக வளாகத்தில் நேற்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கி கடன் மேளா மற்றும் தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சி கழகத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு கட்ட கடன் பெறும் முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இதில் ரூ.7.60 லட்சம் மதிப்பில் 8 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய(26ம் தேதி) விலை நிலவரம்(ஒரு கிலோ): கத்தரிக்காய் ரூ.60 தக்காளி, ரூ.70. வெண்டைக்காய் ரூ.50, புடலைங்காய் ரூ.25, பீர்க்கங்காய் ரூ.40, பாகக்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.12, தடியங்காய் ரூ.25, பூசணிக்காய் ரூ.18, அவரைக்காய் ரூ.140, மிளகாய் ரூ.80, முள்ளங்கி ரூ.50, முருங்கைக்காய் ரூ.100, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.50, இஞ்சி ரூ.160, மாங்காய் ரூ.60. SHARE IT.

தென்காசி மாவட்ட பகுதியில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக கடையநல்லூரில் உள்ள கருப்பாநதி அணை பகுதியில் 11 மி.மீட்டர் மழையும், அடவிநயினார் அணை பகுதியில் 5 மி.மீட்டரும், குண்டாரில் 4 மில்லி மீட்டரும், ராமநதியில் 5 மி.மீட்டரும், கடனா நதியில் 3 மில்லி லிட்டர் மழையும் பதிவாக இருப்பதாக இன்று மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காலை தென்காசி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தென்காசி தொகுதியில் அதிமுகவினர் போட்டியிட்டுயிருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்தாக தகவல். வரும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் விரும்பும் கூட்டணி அமையும் என எடப்பாடி தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று (ஜூலை 25) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சென்னை ஓய்வூதிய இயக்குனரால் வருகிற ஆகஸ்ட் 9ஆம் தேதி அன்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் ஓய்வூதியர்கள் தங்களது குறைகளை தெரிவித்து விண்ணப்பங்களை வருகிற ஜூலை 31ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.