India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்டத்தில் வரும் ஆக.27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 313 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, செங்கோட்டை, சங்கரன்கோவில், ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.
SBI வங்கியில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் ரூ.24,050 – 64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் <
தென்காசியில் சொத்துக்கள் வாங்குவது, விற்பனை செய்வதில் உள்ள சிக்கலை குறைத்து பதிவுத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் ஆளில்லா பதிவு முறையை அறிமுகப்படுத்த பத்திரப்பதிவு துறை தயாராகி வருகிறது. இதனால் இனி சொத்து வாங்க, விற்க சார்பாதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலே பதிவு நடைமுறைகளை ஆன்லைன் மூலம் முடிக்க முடியும். இந்தாண்டு இறுதிக்குள் இது செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாள புதுப்பிப்பு பணிகள் காரணமாக, ரயில் எண்.16845 (ஈரோடு – செங்கோட்டை) ஆகஸ்ட் 27-30 வரை ஈரோடு – திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும், ரயில் எண்.16846 (செங்கோட்டை – ஈரோடு) ஆக.28-31 வரை செங்கோட்டை – திண்டுக்கல் ரத்து, மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் 06845/06846 இயக்கப்படும். ரயில் எண்.16848 (செங்கோட்டை-மயிலாடுதுறை) ஆக.28 – செப்.3 வரை சில நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மக்களே நீங்க ஆசையை வாங்கிய வீட்டின் பத்திரம் பதியும் வரை அலைந்து முடித்து அப்பாடா! என நீங்க உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலை வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <
தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் 4 நடைமேடைகள் அமைந்துள்ளன. 4வது நடைமேடையில் இருந்து சுந்தரேசபுரம், புளியங்குடி, சேர்ந்தமரம், வாசுதேவநல்லூர், ரகுமானியபுரம், வடகரை, கற்குடி, தெற்குமேடுக்கு செல்ல நகர்ப்புற பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் நம்ம ஊர் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <
புளியங்குடியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் 26வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வு 26வது வார்டு ஜின்னா நகர் 7வது தெருவில் அமைந்துள்ள அன்னை பாத்திமா ரலி மதரசாவில் நடைபெற்றது. இதில் நகர தலைவர் சையத் அலி பாஷா தலைமையில் 26 வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். நிகழ்வில் மைதீன் அப்துல் காதர், நகரப் பொருளாளர் முகைதீன் ஆகியோர் பங்கேற்றனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், பூலாங்குளத்தில் சிட்டிசன் கிரஷர் மீண்டும் இயக்கப்படுவதாக தகவல். இயற்கை வள பாதுகாப்பு சங்க தலைமையில், பூலாங்குளம், ஆண்டிப்பட்டி, அயோத்தியாபுரி, ராமநாதபுரம் கிராம மக்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து, விவசாய நிலங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்தால் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த தீர்மானித்தனர்.
தென்காசி மாவட்டத்தில் இன்றிரவு (ஆக.24) முதல் நாளை காலை 6 மணி வரை உட்கோட்ட வாரியாக ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களுடைய கைபேசி எண்ணுடன் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்மந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம், மேலும் நேரடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சிங்கிலிபட்டி பாலத்தில் அரசு பேருந்து, கார், இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. பேருந்து புளியமரத்தில் மோதிய விபத்தில், 23 பயணிகள் உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் புளியங்குடி, தென்காசி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். சொக்கம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.