Tenkasi

News March 30, 2024

தென்காசியில் இலவச நீட் பயிற்சி அறிமுக வகுப்பு

image

தென்காசி மாவட்டத்தில் இன்று (30/03/24) வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் மற்றும் ”ஆற்றுப்படை அறக்கட்டளை” இணைந்து நடத்தும் இலவச நீட் பயிற்சி அறிமுக வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பினை தென்காசி பாஜக பாராளுமன்ற பொறுப்பாளர் ஆனந்தன் துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற உள்ளனர்.

News March 30, 2024

மோட்டார் வாகன விதி மீறல் 236 வழக்குகள்

image

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,தென்காசி மாவட்டத்தில் 29ம் தேதி நடந்த அதிரடி சோதனையில் மோட்டார் வாகன விதிகளை மீறியதாக 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் முழுவதும் போக்சோ, குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு, சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 17 இடங்களில் காவல் துறையினர் ஏற்படுத்தினர் என தெரிவித்தனர்.

News March 30, 2024

தென்காசி: மக்களின் பிரச்சினைக்கு தீர்வு 

image

தென்காசி மாவட்டம், தலைவன் கோட்டை மெயின் ரோடு, செயின்ட் மேரிஸ் ஸ்கூல் சொசைட்டி அருகில் உள்ள பகுதிகளில் தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் உமா மகேஸ்வரி இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
அப்போது அவர் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் கேட்டறிந்து கண்டறிந்து அதற்கான தீர்வு காண வழிவகுப்பேன் என்று உறுதி கூறினார்.

News March 30, 2024

தென்காசி அருகே 10 பேர் அதிரடி கைது 

image

வாசுதேவநல்லூர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே கணேசன் என்பவர் கட்டிடம் மற்றும் கலைஞர் காலனியில் முருகேசன் என்பவரின் வீடு ஆகிய இடங்களில் ஐடி நிறுவனம் என்ற பெயரில் ஆன்லைன் லாட்டரி சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று  வாசுதேவநல்லூர் போலீசார் சங்கனாபேரியைச் சேர்ந்த பசுபதி (28),சத்யா (23),ராணி ஸ்ரீ ஜான்சி (23),சுந்தரத்தாய் (25),கணேசன் (23) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்

News March 29, 2024

தென்காசி அருகே லாட்டரி நிறுவனத்திற்கு சீல்

image

தென்காசி, வாசுதேவநல்லூரில் ஐடி நிறுவனம் போல் செயல்பட்ட ஆன்லைன் லாட்டரி நிறுவனத்தை போலீசார் இன்று சீல் வைத்தனர். ஆன்லைன் லாட்டரி நிறுவனர், மற்றும் பணியாளர்கள் 10 பேரை வாசுதேவநல்லூர் போலீசார் கைப்பற்றினர். 10க்கும் மேற்பட்ட லேப்டாப் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

News March 29, 2024

தென்காசியில் பிரச்சார தேதி அறிவிப்பு

image

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளார். இவர் தமிழக முழுவதும் இந்த கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த வரிசையில் தென்காசி மக்களவைத் தொகுதியில் வருகின்ற 2ம் தேதி பிரச்சாரம் செய்வார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அன்றைய தினம் அவர் விருதுநகரில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

News March 29, 2024

தென்காசியில் ஜனநாயகத்திற்கு ஆபத்து

image

தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது, கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் பாரபட்சம் நிலவுகிறது. பாரதிய ஜனதா மற்றும் தேர்தல் ஆணையம் குறுகிய நோக்கத்தோடு நடந்தால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வரும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை எந்த விதத்திலும் சரியானது இல்லை என்றார்.

News March 29, 2024

கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

image

சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார் அப்போது அவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய நாடாளுமன்றத்தில் பேசக்கூடியவர் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

News March 28, 2024

பெண்கள் விளக்கு ஏற்றி உறுதிமொழி ஏற்பு

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் செங்கோட்டையில் இன்று (மார்ச் 28) வியாழக்கிழமை தேர்தல் விழிப்புணர்வு இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. பெண்கள் தெருக்களில் விளக்கு ஏற்றி விழிப்புணர்வு நடத்தினர். மேலும் 100% வாக்குப்பதிவு வலியுறுத்தி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தேர்தல் பணி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News March 28, 2024

தென்காசி திமுக வேட்பாளர் மனு ஏற்பு

image

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் வேட்பாளராக திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் போட்டியிட நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் வேட்புமனு பரீசீலனை இன்று காலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது

error: Content is protected !!