Tenkasi

News April 4, 2024

புதுகை: தவித்த தொழிலாளி மீட்பு.

image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் உள்ள கிணற்றில் மின் மோட்டார் பழுதானதால் மின் மோட்டாரின் பழுதுகளை சரி செய்ய நேற்று 3ம் தேதி மாலை கிணற்றுக்குள் இறங்கிய தொழிலாளி மேலே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். இது குறித்து தகவலறிந்த வாசுதேவநல்லூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியை பாதுகாப்பாக வெளியே மீட்டனர்.

News April 3, 2024

சென்டர் மீடியனில் அரசு பஸ் மோதி விபத்து

image

தென்காசி காளிதாசன் நகரில் இன்று காலையில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஒட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதியது. இதில் அரசு பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது. உடனடியாக அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News April 3, 2024

தென்காசி மாவட்டத்தில் வெளுக்க போகும் மழை.!

image

நடப்பாண்டு கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 3, 2024

தென்காசி: குண்டர் சட்டத்தில் ஐந்து பேர் கைது

image

தென்காசி எஸ்பி சுரேஷ்குமார் உத்தரவு படி புளியங்குடியில் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்(23), தூத்துக்குடி முத்துகல்யாணி (22), சிந்தாமணிபேரிப்புதூர் கலைச்செல்வன்(19), தென்காசியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அச்சன்புதூர் பீர் முகமது(52), புளியங்குடியில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தாராபுரம் மணிகண்டன்(40) ஆகிய 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

News April 3, 2024

சங்கரன்கோவிலில் ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் தெருவே சேர்ந்த முத்துக்குமார் மனைவி ராஜலட்சுமி வீட்டில் இருக்கும் இன்வெர்ட்டர் பேட்டரிக்கு தண்ணீர் ஊற்றும் போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பலியானார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 3, 2024

தென்காசி: கல் தடுக்கி விழுந்த சிறுவன் பலி

image

கடையநல்லூர் மதீனா நகரை சேர்ந்த நைனார் முஹம்மது மகன் முஹம்மது மைதீன் (16). 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலையில் நோன்பு திறந்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது,திடலில் கல் தடுக்கி விழுந்து மூக்கில் படுகாயம் அடைந்து மயங்கி கிடந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

News April 3, 2024

தென்காசி: 2வது நாளாக சதத்தை கடந்த வெயில்

image

தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு வெயில் தாக்கம் முன்னதாகவே தொடங்கி கொளுத்துகிறது. கடந்த ஒன்றரை மாதமாக கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த ஆண்டின் முதல் வெப்ப “சதம்” பதிவு நேற்று ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2) இரண்டாவது நாளாக வெயில் 100 டிகிரி கடந்தது. பிற்பகல் 3 மணிக்கு அதிகபட்ச வெப்ப பதிவு 100.94 டிகிரியாக உயர்ந்தது. சில பகுதிகளில் அனல் காற்று வீசியது.

News April 2, 2024

தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 நேரத்திற்கு..!

image

நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

News April 2, 2024

வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கும் அறை ஆய்வு

image

தென்காசி மக்களவைத் துறைக்கு வருகிற 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தவுடன் வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான கொடி குறிச்சி யுஎஸ்பி அரசு கலை அறிவியல் கல்லூரி அரங்கில் வைக்கப்பட உள்ளது. அங்கு உள்ள பாதுகாப்பு வசதிகளை தேர்தல் பொது பார்வையாளர் டோபேஸ்வர் வர்மா, கலெக்டர் கமல் கிஷோர் இன்று (ஏப்ரல் 2) ஆய்வு செய்தனர்.

News April 2, 2024

தென்காசியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு

image

தென்காசியில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், தென்காசி மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி காவல்துறையினர் மற்றும் கேரளா மாநில காவல் துறையினர் இணைந்து கொடி அணிவகுப்பு இன்று நடைப்பெற்றது. அணிவகுப்பானது தென்காசி புதியபேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாக காட்டுபாவா பள்ளி அருகே நிறைவுபெற்றது.

error: Content is protected !!