India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் , கலெக்டர் கமல் கிஷோர் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த வாக்காளர்கள் படிவம் 12 டி-யில் குறிப்பிட்டுள்ள முகவரியில் வருகிற 10, 11,12 ஆகிய தினங்களில் வீடுகளுக்கு வந்து வாக்கு பதிவு செய்யப்படும் எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் வீடுகளில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியது முதல் பதிவாகி வரும் வெப்பநிலைகள் அனைத்தும் அதிகபட்சமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று இரவு தென்காசியில் 7 மணி முதல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணசாமி இன்று புளியரை காவல் சோதனை சாவடி அருகில் இருந்து கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும் கனிம வள கனரக லாரிகளின் அணி வகுப்பை பார்வையிட்டார். அப்போது, அவருடன் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் சென்றனர். கிருஷ்ணசாமியை இயற்கை வள பாதுகாப்பு சங்க செயலர் ஜமீன் சந்தித்தார்.
தென்காசியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7ம் தேதி மாவட்ட எஸ் பி சுரேஷ்குமார் உத்தரவின் பேரில். பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், மக்கள் கூடும் முக்கிய அனைத்து இடங்களிலும் காவல்துறை வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் பிரிவு சோதனை செய்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த 2 மாதமாக கோடை வெயில் கொளுத்துகிறது. குற்றாலம் மலைப்பகுதிகளிலும் இதே நிலைமை நீடிக்கிறது. இதன் காரணமாக குற்றாலம் பிரதான அருவிகளில் தண்ணீர் முழுமையாக வற்றி விட்டது. பிரதான அருவி பாறையாக காட்சி அளிக்கிறது. இன்று (ஏப்ரல்.7) ஞாயிறு விடுமுறை கொண்டாட குற்றாலம் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி, வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <
தென்காசி மக்களவைத் தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்ட நாள் முதல் தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான விவசாயிகளும் பங்கேற்று 100% வாக்களிப்பது குறித்த உறுதிமொழி எடுத்தனர்.
சுரண்டையைச் சேர்ந்தவர் பீமன் என்பவர் மகள் எஸ்.ஆக்னஸ் ஷைனி. இவர் பாவூர்சத்திரம் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீர் ஜம்மு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 23-வது சப்-ஜூனியர் தேசிய ஊசூ சாம்பியன்ஷிப்-2024 போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொண்டு தேசிய அளவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அவரை இன்று தென்காசி எம்எல்ஏ பழனி பாராட்டினார்.
தென்காசி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 124 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், 9 வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.