Tenkasi

News March 19, 2025

கருப்பாநதி அணையில் 34 மில்லி மீட்டர் மழை பதிவு

image

தென்காசி மாவட்டத்தில் நேற்று கோடை மழை பரவலாக பல்வேறு பகுதிகளில் பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக கடையநல்லூரில் உள்ள கருப்பா நதி அணைப் பகுதியில் 34 மில்லி மீட்டர், கடையம் ராமநதி அணைப் பகுதியில் 3 மில்லி மீட்டர், அடவி நயினார் அணைப் பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News March 19, 2025

தென்காசி கோவில் கும்பாபிஷேகம்: ஆணையர் பதிலளிக்க உத்தரவு

image

தென்காசியை சேர்ந்த முத்துராஜ் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கோயில் பணிகள் முழுமை பெறாமல் ஏப்ரல் 7ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும் கூறியிருந்தார். இதனை நேற்று விசாரித்த நீதிபதிகள், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், இணை ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

News March 19, 2025

தென்காசியில் இன்று ‘GEM PORTAL’ பதிவு முகாம்

image

தென்காசி மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர், விவசாய பெருமக்கள், வணிகர்கள், தங்களது நிறுவனங்களை ‘GEM PORTAL’-லில் பதிவு செய்வதற்கான முகாம் இன்று(மார்ச் 19) மாவட்ட தொழில் மையம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்வது, தங்களுடைய வியாபாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு தேவையான பொருட்களை விநியோகிக்க உதவும் என தொழில் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News March 19, 2025

நில அளவை செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்க அழைப்பு

image

தென்காசி மாவட்டம் நில உரிமையாளர்கள் நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில் நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நில அளவை செய்யப்படும் மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்று (மார்ச்.18) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News March 18, 2025

தென்காசி மாவட்ட காவலர்கள் ரோந்து பணி

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று 18.03.2025 தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-9884042100 ஐ தொடர்புகொள்ளலாம்.

News March 18, 2025

தென்காசி: அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கலந்தாய்வு

image

தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அனைத்து ஊராட்சி செயலாளர்களுக்கும் கலந்தாய்வு நடப்படவுள்ளது. அதன்படி, வட்டம் விட்டு வட்டம் இடமாற்றம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News March 18, 2025

தென்காசி புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பு எப்போது?

image

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா சட்டசபையில் பேசியபோது தென்காசி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. அதை திறக்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, கட்டடத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியும், அது தொடர்பான வழக்கும் முடிந்த பின்னர் திறக்கப்படும் என்றார்.

News March 18, 2025

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் பழைய குற்றாலம்: அமைச்சர்

image

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி நேற்று சட்டசபையில் பேசியதாவது, குற்றாலத்தில் இரவு பகல் என அனைத்து நேரமும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக இரவு 7 மணி முதல் அனுமதி மறுக்கப்படுகிறது என்றார். பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், குற்றாலம் தற்போது பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

News March 18, 2025

தென்காசியில் மிலிட்டரி கேண்டின்: ராணி ஸ்ரீகுமார் MP வலியுறுத்தல்

image

தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் நேற்று நாடாமன்றத்தில் பேசியபோது, மாவட்டத்தில் ஏராளமான முன்னாள் ராணுவத்தினரும் அவர்களது குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். எனவே அவர்கள் நலன் கருதி தென்காசி மாவட்டத்தில் ராணுவ வீரர்களின் வசதிக்காக சிஎஸ்டி மற்றும் ஈசிஎச்எஸ் கேண்டீன் விரைந்து அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார்.

News March 18, 2025

பதிவு செய்தால் மட்டுமே பணம்! மார்ச் 31 கடைசி நாள்

image

பிரதமரின் கௌரவ நிதி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற ‘அக்ரி ஸ்டேக்’ தளத்தில் பதிவு செய்வது கட்டாயம். இதன் வாயிலாக விவசாயிகளின் நில ஆவணங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மார்ச் 31க்குள் பதிவு செய்வோருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். தென்காசி மாவட்டத்தில் 40,051 பேர் இதில் பயன்பெறும் நிலையில், தற்போது வரை 46% பேர்தான் பதிவு செய்துள்ளனர். தெரியாதவங்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!