India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாவூர்சத்திரம் சாலடியூர் விலக்கில் போலீசார் நேற்று திடீர் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது 3 பைக்குகளில் சென்ற நான்கு பேரை தடுத்து சோதனை செய்தபோது அவர்கள் 43 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 310 மது பாட்டில்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது. மது பாட்டில்கள் கடத்திய ஆவுடையானூர் செல்வன் (52), லட்சுமியூர் சுடலை முருகன் (36), கல்லூரணி ஆனந்த் (35), கீழப்பாவூர் ராமராஜன் (42) ஆகியோரை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து தென்காசி புனலூர் வழியாக பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நேற்று (ஏப்ரல் 22) இரு மார்க்கத்திலும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுபோல் நெல்லையில் இருந்து தென்காசி வழியாக கொல்லம் வரை இயக்கப்பட வேண்டிய பாலருவி ரயிலும் நேற்று இரவு ரத்து செய்யப்பட்டது. திடீர் ரத்து காரணமாக இந்த ரயிலை எதிர்பார்த்த பயணிகள் அவதி அடைந்தனர்.
குற்றாலத்தில் நேற்று நடைபெற்ற ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகி எம்.பி. முகைதீன், தலைமையில் முன்னாள் மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இதில் ஒவ்வொரு வருடமும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் தொடர்ந்து அக்னி நட்சத்திர நாட்களை நினைவுபடுத்தும் வகையில் கொளுத்தி வருகிறது. இன்று காலை முதல் மாலை வரை வெப்ப தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இன்று பிற்பகல் மாவட்டத்தில் அதிகபட்ச வெப்ப பதிவு 101.5 டிகிரியாக உயர்ந்தது. வெயில் தாக்கம் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கோவை, திருவாரூர், தஞ்சாவூர், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரி ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்ட, எஸ்பி அலுவலகத்தில் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற நெடுவயல் சிவசைலநாதர் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா இன்று நடந்தது. விழாவில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்து பாராட்டி பரிசுகள் வழங்கினார்.மேலும் மாணவர்கள் நன்கு படித்து அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
தென்காசி மாவட்ட கலெக்டர் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தென்காசியில் 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (26.04.2024) காலை 11 மணிக்கு இசிஇ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த கல்வி ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த மாணவர்கள் பயன்பெறலாம் என தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம், இலஞ்சியில் பிரசித்தி பெற்ற திருக்குமரன் திருக்கோயில் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் இன்று காலையில் நடைபெற்றது.
அதனை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பூஜைகள் நடந்தன தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமிகள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மேலும் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
புளியரை தமிழக கேரள எல்லைப் பகுதியில் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து இன்று மூன்றாவது நாளாக
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்படுகின்றன வாகனங்களில் கிருமி நாசினி தெளித்த பின்னர் அனுமதிக்கப்படுகின்றது.இதில் சுகாதாரத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்
தென்காசி உட்கோட்டத்தில் 2024 பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினருக்கு தென்காசி சிவா திருமண மண்டபத்தில் இன்று மாலை பாராட்டு கூட்டம் நடத்தப்பட்டு இனிப்பு, காரம் ,தேநீர் விருந்து அளித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர், மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.